என் மலர்
நீங்கள் தேடியது "Gold"
- செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை:
அங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
ஆண்கள் அணியும் (ஓபன் பிரிவு) பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா (ஓபன் பிரிவு) மற்றும் அவரது சகோதரி வைஷாலி (பெண்கள் பிரிவு) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (ஆண்கள் அணிக்கு விளையாடாத கேப்டன்) அர்ஜூன் கல்யாண் (பெண்கள் அணி பயிற்சியாளர்) ஆகியோரும் இந்திய அணியில் இருந்தனர்.
இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் ஆவார்கள்.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதித்த குகேஷ், பிரக்ஞானந்தா வைஷாலி மற்றும் ஸ்ரீநாத், அர்ஜூன் கல்யாண் ஆகிய 5 கிராண்ட் மாஸ்டர்களுக்கும் வேலம்மாள் நெக்சஸ் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல் மோகன், துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த பரிசு தொகையை வழங்கினார்கள்.
விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது. முன்னதாக 5 கிராண்ட் மாஸ்டர்களும் தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
- சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
கே.கே. நகர்:
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடைபெறுகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு வந்த ஏர்இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 179 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்கசங்கிலி, தங்க துண்டு ஆகியவற்றை தனது பேன்ட் பாக்கெட்டில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 117 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்க துண்டை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பிலான 296 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவை சேர்ந்த மகேஷ் (49) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று, திரும்பியது தெரியவந்தது.
இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பேட்டிக் ஏர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த பாண்டி (46), திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகர் (53), திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, உக்கடை பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி (52)ஆகியோரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை பிடித்த அதிகாரிகள் விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
புதுடெல்லி:
லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.