search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
    • நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது படம் இடம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா.

    இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்தார்த் இரண்டரை வயதில் இருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் அம்பு, டேக்வாண்டோ, பாக்சிங் ஆகிய தற்காப்பு கலைகளை ஆர்வமாக விடாமுயற்சியுடன் கற்று வருகிறார்.

    இதுவரை மூன்று நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

    அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

    இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

    நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    சிறு வயதிலிருந்தே இவரது பெற்றோர் மற்றும் யோகா சிலம்பக்கலை மாஸ்டர்

    முகமதுசபீர் ஆகியோரின் ஆக்கமும் ஊக்கமும் மற்றும் பெரும் முயற்சியால் சித்தார்த் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

    தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது.

    அதில் யோகா போட்டியில் சித்தார்த் கலந்து கொண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளார்.

    இந்த தேர்வின் மூலம் வரும் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியா வீரராக போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    மேலும் வில் அம்பு போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வுக்காக அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியில் சித்தார்த் பங்கேற்க உள்ளார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று சிறுவன் சித்தார்த் நம்பிக்கையுடன் கூறினார்.

    இதுகுறித்து சித்தார்த்தின் பெற்றோர் யோகராஜ் கூறும்போது, செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்துக்கு சித்தார்த் செல்ல உள்ளார்.

    அதற்கான தீவிர பயிற்சி தற்போது மேற்கொண்டு வருகிறார்.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைப்பார் என்றார்.

    • செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    • விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

    சென்னை:

    அங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    ஆண்கள் அணியும் (ஓபன் பிரிவு) பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது.

    செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா (ஓபன் பிரிவு) மற்றும் அவரது சகோதரி வைஷாலி (பெண்கள் பிரிவு) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (ஆண்கள் அணிக்கு விளையாடாத கேப்டன்) அர்ஜூன் கல்யாண் (பெண்கள் அணி பயிற்சியாளர்) ஆகியோரும் இந்திய அணியில் இருந்தனர்.

    இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் ஆவார்கள்.

    செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதித்த குகேஷ், பிரக்ஞானந்தா வைஷாலி மற்றும் ஸ்ரீநாத், அர்ஜூன் கல்யாண் ஆகிய 5 கிராண்ட் மாஸ்டர்களுக்கும் வேலம்மாள் நெக்சஸ் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல் மோகன், துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த பரிசு தொகையை வழங்கினார்கள்.

    விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது. முன்னதாக 5 கிராண்ட் மாஸ்டர்களும் தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

    ×