என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரிஸ் ஒலிம்பிக்"

    • உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
    • போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

    44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.

    அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

    பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.

    பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.

    2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார். 

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக சாம்பியன் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.

    பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐரோப்பியாவில் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுடன் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் நீரஜ் சோப்ரா வெளிநாட்டில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் மே 29-ந்தேதியில் இருந்து ஜூலை 28-ந்தேதி வரை ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக TOPS என்ற திட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீர்ஜ் சோப்ராவின் பயிற்சிக்காக தொகை வழங்கப்படும்.

    நீரஜ் சோப்ராவை போன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சில வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக உதவிகள் கேட்டுள்ளது.

    • பாரிசில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜூலை 27-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • அப்போது ஹாக்கி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மன்பிரித் சிங் ஆவார்.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங். இவரது தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங் கூறியதாவது:

    நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

    இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரிஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரிஸ் ஒலிம்பிக்சில் உள்ளது.

    மோசமான காலங்களில் குடும்பம் மற்றும் குழுவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர் தன்னை மிகவும் தனிமையாக உணர்கிறார். அணி ஒன்றாக நிற்கும்போது அது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, மீண்டு வருவதற்கு உதவுகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு சிறந்த மறுபிரவேசத்தைப் பார்த்தோம்.

    இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹாக்கியில் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    டோக்கியோவில் இருந்த 11 வீரர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாங்கள் அதையே தொடர்வோம். 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    நல்ல அணிகளுக்கு எதிராக எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் 50-50 வாய்ப்புகளை மாற்றுவது ஒரு சாம்பியனின் அடையாளமாகும். பாரிசில் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
    • டோக்கியோ ஒலிம்பிக்கில் வோண்ட்ரசோவா வெள்ளி வென்றார்.

    பாரிஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து செக் நாட்டு வீராங்கனையான மார்கெட்டா வோண்ட்ரசோவா மற்றும் போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் கவனம் செலுத்துவதற்காக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன் என வோண்ட்ரசோவா தெரிவித்துள்ளார்.

    இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலந்து வீரர் ஹர்காக்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    • இஸ்ரேலை தடைசெய்யக் கோரி பாலஸ்தீன குழு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியது.
    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரிஸ்:

    பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர்.

    இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ஐ.ஓ.சி.யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. அதுவே அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சக வாழ்வில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
    • வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.

    பாரிஸ்:

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.

    இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

    இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    • ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

    கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ×