என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொல்லை"

    • இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவரது கணவர் சாப்பிட்டு விட்டு இரவு வேலைக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் ரமேஷ் (வயது 32) என்பவர் இளம்பெண் வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார். இதனை கேட்டு இளம்பெண் கதவை திறந்தார். அப்போது இளம்பெண் என்னவென்று கேட்டார். அதற்கு ரமேஷ் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டது என கூறினார்.

    பின்னர் அவரது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து வீட்டை சுற்றி தேடுவது போல நடித்தார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அவர் உறுதி செய்தார். திடீரென டிரைவர் ரமேஷ் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்தார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    அதன் பிறகு ரமேஷ் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டார். இளம்பெண் சத்தம் போடவே டிரைவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    பின்னர் 10 நிமிடத்துக்கு பிறகு ரமேஷ் கதவு, ஜன்னலை தட்டியும், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியும் தொல்லை கொடுத்தார். ஆனால் இளம்பெண் கதவை திறக்கவில்லை. அதன் பின்னர் அவர் அங்கு இருந்து சென்றார்.

    மறுநாள் காலையில் இளம்பெண் அவரது கணவர் வந்ததும் இது குறித்து கூறினார். பின்னர் இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரைச் சேர்ந்தவர் 36 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் முதலாவது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து தனது தாயிடம் கூறியபோது அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்த போதும் அவரது தொல்லை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.

    நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது தனது மகளை வலுக்காட்டாயமாக அவர் பலாத்காரம் செய்தார். இதில் மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகளை பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×