என் மலர்
முகப்பு » தங்கப்பதக்கம்
நீங்கள் தேடியது "தங்கப்பதக்கம்"
- இதே பிரிவில் மற்றொரு மாணவி 11-ம் இடம் பிடித்துள்ளார்.
- நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மாணவியும் 11-ம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜோதிகாவுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.
துணை முதல்வரும், தமிழ் துறை பேராசிரியருமான குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் புத்தகம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், அறிவுச்செல்வன், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
X