என் மலர்
நீங்கள் தேடியது "tag 94313"
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, இளையராஜா வீட்டிற்கு சென்று கிரிக்கேட் விளையாடி உள்ள சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் திரைக்கதையில் இன்னும் சிறப்பு சேர்க்க ரஜினி தரப்பில் சில யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என்று தெரிகிறது.
ரஜினிக்கு சமீபத்திய குடும்பப் பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்திருந்தது. புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இது போன்ற தருணங்களில் சில வருடங்களுக்கு முன்பு இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார். அங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக போதனைகள் மற்றும் ஆத்மஞான அமைதி அவரை உற்சாக மனநிலைக்கு மாற்றி வைக்கும்.
ஆனால் இன்று அவரது உடல்நிலை மாற்றத்திற்குப் பிறகு இமயமலைக்கு போவதை தவிர்த்து வருகிறார். அதற்கு மாற்றாக ஆன்மிக அமுதம் அருந்தும் இடம் எங்காவது கிடைக்குமா? என்று ரஜினி ஏங்கிக் கொண்டிருந்தார். அந்த குறைதீர்ந்து விட்டது. இசைஞானி இளையராஜாவும், அவரது வீடும் தான் ரஜினியின் ஆன்மிக தாகத்தை தணிக்கும் இடமாக உள்ளன. அதனால்தான் சமீபகாலத்தில் பல முறை இளையராஜாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி.

இங்கு வந்தால் நான் நிம்மதியாக உணர்கிறேன் சாமி.. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே என்று இளையராஜாவிடமே ரஜினி ஏக்கத்துடன் கேட்டது இதனால்தான். இளையராஜாவை சந்திப்பது அவருக்கு இமய மலைக்கு போய் வந்த மன ஆறுதலை கொடுத்திருக்கிறது என்பதே நிஜம். இருவருக்குமிடையேயான நட்பு என்பது திரைத்தொழிலைத் தாண்டியது.
எப்போதெல்லாம் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்போது ஒரு போனை போட்டு சாமி உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்று கேட்டு விட்டு புறப்பட்டுவிடுவார் ரஜினி. அப்படி ஒருநாள் ரஜினி இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு செல்ல ரஜினி வருகையால் வீடே குதூகலமாகியிருக்கிறது. அப்போது கார்த்திக் ராஜாவின் மகன் யதீஷ்வர் படித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினியின் புகழ் வெளிச்சம் புரியாத வயது.
தனிமையில் இளையராஜாவும் ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிள் என்னோட கிரிக்கெட் விளையாட வர்றீங்களா? என்று யதீஷ்வர் கேட்க, இளையராஜாவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். டேய் அவரு யாரு.. அவரை போயி உன்கூட விளையாடக்கூப்பிடுற என்று செல்லமாய் பேரனை அதட்டல் போட்டிருக்கிறார்.
உடனே பக்கத்திலிருந்த ரஜினி, சாமி விடுங்க குழந்தை தானே என்று சொல்லியபடியே இதோ வர்றேன் கண்ணா என்று துள்ளிக் குதித்து ஓடியிருக்கிறார். ரஜினி பந்து வீச யதீஷ்வர் மட்டையை வீசி ஆட, பிறகு ரஜினி கிரிக்கெட் ஆட இப்படியே பொழுது கழிந்திருக்கிறது. இருவரும் விளையாடுவதை புல்வெளியில் நின்று சிரித்தபடியே ரசித்து மகிழ்ந்திருக்கிறார் இளையராஜா. ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் இந்த ஆத்மார்த்தமான ஆன்மிக நட்பு அகல் விளக்கும் ஒளியும்போல ஒன்றைவிட்டு ஒன்று எப்போதும் நீங்காது இணைந்தே இருக்கும்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன்-ரஜினி இருவரின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கமல் - ரஜினி - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில் கமல்-ரஜினியின் சந்திப்பு குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நன்றி! கமல் சார், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. இது எனக்கு ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir's❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச் சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி ரஜினி மற்றும் கமலுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ கூறியுள்ளார்.
நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ பேட்டியளித்து உள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Rajini #Darbar
ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்கள் அன்பு தொல்லைகள் இடையூறாக இருக்கும் என்று கருதியும், கதாபாத்திரங்களின் தோற்றங்களை செல்போனில் படம்பிடித்து வெளியிடுவதை தடுக்கவும் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் அங்கேயும் கேமராவுடன் ரசிகர்கள் திரள்கிறார்கள்.

ரஜினிகாந்தின் முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்பு தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. ‘தர்பார்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

மும்பையில் கடந்த 30-ந் தேதி முதல் தொடர்ந்து நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பையும் பாதுகாப்பை மீறி திருட்டுத்தனமான படம் பிடித்து இணையதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றை செல்போனில் படம் எடுத்து இணையதளங்களில் கசிய விட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தை 100 தடவைக்கும் மேலாக பார்த்திருப்பதாக பிரபல இசையமைப்பாளர் கூறியிருக்கிறார். #Petta
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேட்ட’ படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதற்கு இசையமைப்பாளர் அனிருத், பின்னணி இசையமைக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் பலர் தாங்கள் எத்தனை முறை படத்தை பார்த்தார்கள் என்பதையும் பதிவு செய்து வருகிறார்கள். #Petta #Rajini #Rajinikanth