search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"

    • அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார்.
    • மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார்.

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க. எம்.எல்ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனையில் ஈடுபட்டதோ இல்லை.

    * மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.

    * ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தாமாக முன் வந்து மன்னிப்புக்கேட்டார்.

    * தான் பேசியதை இணையத்தில் வேறுமாதிரி பரவிடுச்சி. நான் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர் என்று சொல்லி குடும்பத்தை பற்றி எல்லாம் பேசினார்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். 

    மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.
    போபால்:

    ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.

    இந்த போலி நிறுவனங்கள் மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.700 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியது தெரியவந்தது.

    இந்தூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி வரி கமிஷன் மற்றும் மத்திய பிரதேச போலீசின் சைபர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் இந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக 5 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷித்கான் கூறும்போது, ‘மோசடியில் ஈடுபட்டவர்கள் வழக்கமான வங்கி சேவைகளை தவிர்ப்பதற்காக பல டிஜிட்டல் வாலட் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

    சோதனையின்போது சூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த கட்டிடத்தில் போலி நிறுவனங்களின் செல்போன்களின் சிம் கார்டுகள், ஆவணங்கள் லெட்டர் பேடு, முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்’ என்றார்.
    மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

    இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

    மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்
    ×