search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை"

    • தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த வாரம் 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,824-க்கு விற்றது.

    மறுநாள் 17-ந்தேதி அது 38 ஆயிரத்தை தாண்டியது. 18-ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 19-ந்தேதி மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி ரூ.38,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    20-ந்தேதி ரூ.38,344-க்கும், 21-ந்தேதி ரூ.38,536-க்கும் விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,648-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,817-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது.

    அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,100-க்கு விற்பனையாகிறது.
    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 775 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60 ஆக உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது
    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 67 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,696-க்கு விற்கப்பட்டது.

    24-ந்தேதி அது ரூ. 38,680 ஆக குறைந்தது. மறுநாள் ரூ.38,440 ஆக குறைந்தது. மே 26-ந்தேதி ரூ.38,120 ஆக குறைந்தது.

    அதன் பிறகு கடந்த 27-ந்தேதி சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,200-க்கு விற்றது. 28 மற்றும் 29-ந்தேதிகளில் தொடர்ந்து அதே விலையே நீடித்தது.

    கடந்த திங்கட்கிழமை விலை மேலும் உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38,200 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    1 கிராம் தங்கம் நேற்று ரூ.4,775-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில்,  தி. கவுண்டம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பலமகாதேவி, வடகரையாத்தூர், ஆனங்கூர், கண்டிப்பாளையம், கு. அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், நன்செய் இடையார், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். 

    வாழைத்தார் விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு  வந்து  தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ 400-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 300-க்கும் ,ரஸ்தாலி வாழைத்தார்ரூ 300-க்கும் ,பச்சநாடன் வாழைத்தார் ரூ 250-க்கும், மொந்தன் வாழைத்தார் 300-க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ 500 க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 350 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ 350 க்கும், பச்சநாடன் வாழைத்தார் 
    ரூ 300க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ400 க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,400-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம், இந்த வார தொடக்கத்திலும் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது. கடந்த 30-ந்தேதி (திங்கட்கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31-ந்தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.

    அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுன் விலை ரூ.38,080 ஆக உயர்ந்தது. இன்று மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

    ஒரு கிராம் நேற்று ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4 ஆயிரத்து 775 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.
    ×