என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீனா"
- சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது.
- சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா?
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் மகாராஜா திரைப்படம் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அத்திரைப்படம் 2000 கோடி வசூலை கடந்தது.
இந்நிலையில் சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
- மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக தென் கொரியா அணியும் மூன்று முறை மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. தற்போது இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
- விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
- விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த ஜுஹாய் ஏர்ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
- விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசளித்துள்ளார்.
- குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.
உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர்.
பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். ஆனால் தான் மிகவும் பணம் படைத்த குடும்பத்தை சேர்த்தவர் என்று ஏமாற்றி ஜியாஜியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி ஜியாஜுவுக்கு பரிசளித்து ஏமாற்றியுள்ளார். ஜியாஜியா கர்ப்பமான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் ஜியாஜுன் பணக்காரர் இல்லை என்று சில காலங்களிலேயே மனைவிக்கு தெரியவந்தது. ஆனால் கணவனை விவகாரத்து செய்யாமல் குழந்தையை தானே வளர்க்க மனைவி முடிவெடுத்துள்ளார். கணவனையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தொடர்ந்து ஜியாஜுன் ஆன்லைன் மூலம் ஜியாஜாங் என்று மற்றொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
அவரிடம் இருந்து பணம் பெற்று தனது மனைவி வாழும் வீடு உள்ள காம்பவுண்டிலேயே வீடு ஒன்றை எடுத்து அங்கு ஜியாஜாங் உடன் இருந்துள்ளார். மேலும் இதுமட்டுமின்றி பல்கலைக் கழக மாணவிகள் ஜியாமின், ஜியாசின் மற்றும் நர்ஸ் வேலை பார்க்கும் ஜியாலான் ஆகிய மூவரையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அனைவரிடமிருந்தும் அவ்வப்போது பணம் பறித்தும் வந்துள்ளார்.
மொத்தமாக சுமார் 247 லட்சம் வரை அவர்களிடம் இருந்து ஜியாஜுன் கரந்துள்ளார் . இவர்கள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள கட்டடங்களில் உள்ள வீட்டில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.
ஆக மனைவி மற்றும் 4 காதலிகளை ஒரே காம்பவுண்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஜியாஜுன் கடந்த 4 வருடமாக மெயின்டேன் செய்து வந்துள்ளார். கடைசியில் ஜியாஜுன் காதலிகளில் ஒருவர் அவர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஜியாஜுன் குட்டு வெளிப்பட்டுள்ளது.
- இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
- விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்று கொள்ளலாம்.
அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.
இதேபோல் நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
- எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
புதுடெல்லி:
2020-ம் ஆண்டு மே மாதம் சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் நுழைய முயன்றது. இந்த முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்யும். எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் அகற்றப்படும்.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
- அப்போது அவர், எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கம் என்றார்.
மும்பை:
சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, சீன பிரதமர்கள் எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் அடிப்படையில், இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கி உள்ளனர். இதனால் எல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள புனே பிளேம் பல்கலைக்கழகத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கமாகும். இது எல்லாம் ஒரு இரவில் நடந்துவிடாது. விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.
சீனா எல்லையில் படைகளை நிலைநிறுத்துவதற்கு பட்ஜெட்டில் 5 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால் கடும் குளிரிலும் நமது வலிமையைக் காட்ட முடிந்தது.
எல்லையில் இயல்வு நிலை திரும்புவதற்கு மத்திய அரசு, ராணுவம் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
- விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இதனிடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் எல்லை பகுதிகளில் ஒன்றாக ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை தற்போது எட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இருதரப்பு சந்திப்பு நடைபெறும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
- ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்தது
லடாக் எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா சீனா இடையே புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் தற்போது புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்வது முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிற
- தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது
- லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது
இந்தியவனுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி, சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும். பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.
சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
- பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது.
எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது.
- கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பாளர்களின் அன்றாட தேவைகளை வளாகத்தை விட்டு வெளியேறாமல் பூர்த்தி செய்கிறது.
- 39 அடுக்குமாடி குடியிருப்புகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடமான ரீஜென்ட் இன்டர்நேஷனலின் கண்கவர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் அமைந்துள்ள இந்த 675 அடி உயர கட்டடக்கலை அதிசயம் ஆரம்பத்தில் உயர்தர ஓட்டலாக கட்டப்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு விரிவான அடுக்குமாடி வளாகமாக மாற்றப்பட்டது.
S வடிவிலான ரீஜண்ட் இன்டர்நேஷனல் 1.47 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது மற்றும் அதன் 39 அடுக்குமாடி குடியிருப்புகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
இதன் கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பாளர்களின் அன்றாட தேவைகளை வளாகத்தை விட்டு வெளியேறாமல் பூர்த்தி செய்கிறது.
இந்த வளாகத்தில் ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
கட்டிடத்திற்குள் உள்ள அதிநவீன உடற்பயிற்சி மையங்கள், உணவு கோர்ட், உட்புற நீச்சல் குளங்கள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், நெயில் சலூன்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கின்றனர்.
? More than 20,000 people are living in this world's biggest residential building in China. pic.twitter.com/O3nBToayx4
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 6, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்