search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    • லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதி லட்டு தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

    லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.

    அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருகையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

    இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-

    ஆந்திராவில் பேய்கள் ராஜ்ஜியம் நடந்து வருகிறது. லட்டு விவகாரத்தில் பா.ஜ.க. கண்ணை மூடிக்கொண்டுள்ளது.

    ஒருபுறம் போலீசார் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டி நோட்டீஸ் அனுப்புகின்றனர். இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தனது தவறுகளை மறைக்க அண்டை மாநில பா.ஜ.க.வினரை கொண்டு வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குகிறார்.


    இது தவறான செயல். ஏழுமலையானை மதிக்கும் மற்றும் நேசிக்கும் நான் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை.

    அதனால் எனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைக்கிறேன். திருப்பதி செல்லும் பயண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

    100 நாள் ஆட்சியில் நடந்த தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் லட்டு விவகாரத்தில் பா.ஜ.க கண்ணை மூடிக் கொண்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கு பக்தர்கள் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    26-ந்தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.

    மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவம்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்குகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்...தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...
    தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சாமிக்கு சீனிவாச கல்யாணம் நடக்கிறது.

    அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட ரூ.ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்

    எனினும் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாததால் கோவிலுக்கு வெளியே வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.

    அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×