என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 96187
நீங்கள் தேடியது "ஸ்மார்ட்வாட்ச்"
போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் நியோ வேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் ப்ரோ மற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் போட் அறிமுகம் செய்து இருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய போட் வேவ் நியோ மாடல் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
போட் வேவ் நியோ மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. போட் வேவ் நியோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் அம்சங்கள், ஒரு வார பேட்டரி லைஃப், ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
போட் வேவ் நியோ அம்சங்கள்:
- 1.69 இன்ச் 454x454 பிக்சல் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே
- 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
- ஸ்டிரெஸ் டிராக்கர், அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர்
- பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- IP68 சான்று
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி
- 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
புதிய போட் வேவ் நியோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமேஸ்பிட் GTS 2 மினி நியூ வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த அமேஸ்பிட் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் ஜிடிஆர் 2 நியூ வெர்ஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் GTS 2 நியூ வெர்ஷனை அடுத்த வாரம் இந்தியாவில் லாஞ்ச் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 2 மாடலைப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்GTS 2 நியூ வெர்ஷன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பெட்டல் பிங்க் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷனில் 1.65 இன்ச் AMOLED 341PPI ஸ்கிரீன் மற்றும் curved கிளாஸ் உடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐ.ஒ.எஸ். 10.0 சப்போர்ட் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட், ஸ்டெப் கவுண்ட், கலோரி கவுண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மற்றும் ஸ்டிரஸ் லெவலையும் கண்காணிக்கும்.
இதுதவிர வாட்டர் ரெசிஸ்டன்ட், புளுடூத் 5.0, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட், 6 நாட்கள் வரை நீடிக்கும் 246mAh பேட்டரி, ஜிபிஎஸ், புளுடூத் காலிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை jt. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.
முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X