search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூண்டாய்"

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி, முன்பதிவையும் அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீண்டாய் டக்சன்

    காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய 2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.  
    ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனஅயூ 2021 வாக்கில் 1 லட்சத்து 08 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ள வென்யூ மாடல்களில் 18 சதவீத யூனிட்கள் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது. 2021 ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரம் எஸ்.யு.வி.க்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 42 சதவீத யூனிட்கள் ஹூண்டாய் வென்யூ மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் இந்த பிரிவில் வென்யூ மாடல் மட்டும் 16.9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், iMT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம்.


    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கிரெட்டா N மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரையும் ஹூண்டாய் வெளியிட்டு உஎள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் படங்கள் ஹூண்டாய் பிரேசில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

     ஹூண்டாய் கிரெட்டா N லைன் டீசர்

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் N லைன் வேரியண்ட்கள்: i10, i20, i30, எலாண்ட்ரா, கோனா மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் ஹூண்டாய் i20 ஹேச்பேக் மாடலில் மட்டுமே N லைன் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் வென்யூ N லைன் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலில் i20 N லைன் ஹேச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடனேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதன்படி முன்புற கிரில் மீது N லைன் பேட்ஜ், காண்டிராஸ்ட் ரெட் நிறம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்படலாம்.
    ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. முன்னதாக வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இது குறித்து ஹூண்டாய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் டிசைன் விவரங்களு்ம இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

     ஹூண்டாய் வென்யூ

    தற்போது இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 82 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை தவிர ஹூண்டாய் வென்யூ டீசல் வேரியண்டில் 99 ஹெச்.பி. பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடல் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் சர்வதேச வெளியீடு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது N சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இரண்டாவது N லைன் மாடலாக வென்யூ N லைன் காரை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ N மாடலுடன், கிரெட்டா N லைன் மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா N லைன் மாடல் பிரீ-ப்ரோடக்‌ஷன் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த வாரம் கிரெட்டா N லைன் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் விற்பனை முதற்கட்டமாக தென் அமெரிக்காவில் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் கிரெட்டா N லைன் பிரீ-ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அகலமான முன்புற கிரில், கிரில் இன்சர்ட்களில் டார்க்
    க்ரோம் செய்யப்பட்டு உள்ளது.
     ஹூண்டாய் கிரெட்டா N லைன்
    Photo Courtesy: ShortsCar

    பக்கவாட்டுகளில் கிரெட்டா N லைன் மாடல் ஸ்டாண்டர்டு எஸ்.யு.வி. போன்றே காட்சியளிக்கிறது. எனினும், அலாய் வீல் டிசைன், வித்தியாசமான ஸ்டைலிங் கொண்ட கிளாடிங் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் உள்ளன. பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் தோற்றம் கொண்டிருக்கிறது. 

    தென் அமெரிக்க சந்தையில் கிரெட்டா மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. கிரெட்டா N மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.  
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலும் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் இந்த மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஹூண்டாய் தரப்பில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு புது தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலில் குரோம் இன்சர்ட்கள் கொண்ட புதிய கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் புது பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், சில்வர் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் காண்டிராஸ்ட் கலர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன.

     2022 ஹூண்டாய் வென்யூ

    புதிய ஹூண்டாய் பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் புது வகை இருக்கைகள், ரிவைஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 
    ஹூண்டாய் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 1400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தெலுங்கானா தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி முன்னிலையில் வெளியானது.


    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிதாக டெஸ்டிங் டிராக் அமைக்க தெலுங்கானா மாநிலத்திற்கு உதவி செய்ய இருக்கிறது. மாநில அரசின் மொபிலிட்டி வேலி எனும் திட்டத்தின் கீழ் புதிதாக டெஸ்டிங் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 1,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் பங்குதாரர் ஆக ஹூண்டாய் நிறுவனம் இடம்பெற இருக்கிறது.

    முதலீடு பற்றிய அறிவிப்பின் போது ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த அலுவலர் யாங்சோ சி மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கான தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கே.சி. ராமா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் பகுதியில் நடைபெற்ற பொருளாதார சந்திப்பின் போது வெளியானது. 

     ஹூண்டாய்

    தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து துறையை உறுதிப்படுத்த ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு உதவியாக இருக்கும். தெலுங்கானாவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மொபிலிட்டி வேலி என்ற திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களுக்கென சொந்தமாக டெல்டிங் டிராக்-களை வைத்துள்ளன. ஹூண்டாய் மோடடார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைக்கு மிக அருகில் டெஸ்டிங் டிராக்-களை அமைத்துள்ளன. 
    ஹூண்டாய் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலின் ஏராளமான கனெக்டெட் அம்சங்களை கொண்டிருந்தது.


    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம்-டு-கார் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ மாடல் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்கள் மற்றும் ஹூண்டாய் இந்திய க்ளிக் டு பை தளத்தில் நடைபெறுகிறது.

     ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட்

    ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம் டு கார் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் புது வென்யூ மாடலில் வழங்கப்படுகிறது. 
     
    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.  
    ×