என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96631"

    என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும் என்று நித்யானந்தா கூறி உள்ளார்.
    வெளிநாடு தப்பி ஓடி கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது.

    இதையடுத்து நித்யானந்தா வெளியிட்ட பதிவில், என் உடல்நிலை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. நான் சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என கூறியிருந்தார்.

    எனினும் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், எனக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு விட்டது. அதில் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை, தூக்கம் இல்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

    வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது.

    உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

    நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும்.

    நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன்.

    நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவருராக பார்க்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



    சமாதியின் உள்ளே இருப்பதன் மூலம் இப்போது ரசித்துக் கொண்டிருக்கும் சத்சங்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் என்று நித்யானந்தா கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும்  வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

    அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார்.

    அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை.  எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள  பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.


    கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி நித்யானந்தா கொண்டாடி உள்ளார்.
    சென்னை:

    இந்தியாவில் குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார்.

    அவர் கைலாசா என்ற தீவை உருவாக்கி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆன்லைன் மூலம் தனது பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றுவதோடு, சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளிட்டு வருகிறார்.

    இந்நிலையில் நேற்று கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி கொண்டாடி உள்ளார்.

    திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் அவர் கைலாசாவிலும் தீபம் ஏற்றி கொண்டாடி உள்ளார். இதே போல பெங்களூரு மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அவர் சமீபத்தில் வெளியிட்ட வெளியிட்ட ஒரு வீடியோவில் சென்னை மழை வெள்ளம் பற்றி பேசியுள்ளார்.

    முகநூலில் மீம்ஸ் ஒன்றை பார்த்தேன். அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற மாதிரியும், அதற்கு பிறகு முதல்வரானவரும் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுவது மாதிரியும் இருந்தது.

    இந்த மாதிரி வேற வேற முதல்வர்கள் வேட்டியை மடித்துக்கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற போட்டோக்கள் இருந்தன. எத்தனை முதல்வர்கள் வந்து போனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை.

    அதாவது அடிப்படையான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளது.

    மழை வெள்ளத்தை பெரிய பெரிய ஆளுங்க வந்து பார்வையிட்ட உடனே, நம்முடைய கவனம் திசை மாறி விடுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை.

    இந்த மீம்சை பார்க்கும்போது, இத்தனை ஆண்டு காலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை அல்லது பிரச்சினை முற்றிப் போய் விட்டது என்பது தெரிகிறது.

    மழை அடிக்கிற மாதிரி அடிக்கும், நம்ம அழுகிற மாதிரி அழணும். நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும். இது அடுத்த வரு‌ஷமும் நடக்கும். அவ்வளவுதான். எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்து விட்டோம். அதுதான் பிரச்சினை.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது.





    பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி. தயானந்தா விளக்கம் அளித்துள்ளார். #Nithyananda
    பெங்களூரு:

    தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ம் ஆண்டு நித்யானந்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராமநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நித்யானந்தா தனது ஆசிரமத்தில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வருகிறது.

    இதுபற்றி கர்நாடக மத்திய மண்டல ஐ.ஜி. தயானந்தா கூறுகையில், ‘நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என நான் நினைக்கவில்லை. அவர் மீது முக்கிய வழக்கு ஒன்று கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்தார். இதனால் அவர் சட்டத்துக்கு உட்பட்டு வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. அவர் வடஇந்தியாவில் இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். #Nithyananda
     
    மீடூ இயக்கத்தில் பிரபல சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. #Nithyanandha #metoo
    பெங்களூரு:

    மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.

    பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

    நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

    அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை தற்போது பெங்களூரு ராம நகரா கூடுதல் மாவட்ட மற்றும் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. #Nithyanandha #metoo


    மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததற்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. #MaduraiHighCourt #Nithyananda
    மதுரை:

    மதுரை ஆதீன மடம் 2,500 ஆண்டுகள் பழமையானது. இந்த மடத்தின் 292-வது மடாதிபதியாக கடந்த 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுக்களை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதே கோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘என்னை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடருவது குறித்து முறைப்படி அறநிலையத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர்கள் அறநிலைய துறையினரிடம் அனுமதி பெறவில்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார். ஆனால் நித்யானந்தாவின் மனுவை கடந்த 2014-ம் ஆண்டு மதுரை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்த தீர்ப்பு வருமாறு:-

    மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு அறநிலையத்துறை சட்டப்படி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் கீழ்கோர்ட்டில் நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் முறையாக அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. அதன்படி நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 
    மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். #Nityananda #Nityanandasoftware
    பெங்களூரு:

    மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். #Nityananda #Nityanandasoftware

    கர்நாடக மாநிலம்,  பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா சீடர்களிடம் உரையாற்றும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

    தனது பேச்சின் இடையே அதிர்ச்சிகரமான ஒரு தகவலை சீடர்களுக்கு அவர் கூறுகிறார். மனிதர்களுக்கும் குரங்குகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் உள்ளுறுப்புகளில் சில வேறுபாடுகள் உள்ளது.
     
    இதை சரிப்படுத்தி குரல்வளத்துக்கு காரணமான ‘வோக்கல் கார்ட்’ எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரிப்படுத்தி விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை பேச வைக்கலாம் என்பதை நான் ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

    சிறப்பு உணர்வு அதிர்வலைகளை விலங்கினங்களின் மூளை பகுதிகளுக்குள் செலுத்துவதன் வாயிலாக இந்த உறுப்புகளை அவற்றுக்குள் உருவாக்கி, குரங்கு உள்ளிட்டவற்றை பேச வைக்க முடியும் என்பதை அறிவியல்பூர்வமான, மருத்துவரீதியிலான ஆராய்ச்சியின் மூலம் நான் கண்டறிந்தேன்.

    இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ளதை உறுதிப்படுத்தி கொண்ட பின்னர்தான் இதை நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேம். நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள். இதை பயன்படுத்தி இன்னும் ஓராண்டுக்குள் குரங்குகளை நான் பேசவைத்து காட்டுகிறேன்.

    இதற்கான மென்பொருளை உருவாக்கி, நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதை உறுதிப்படுத்தி கொண்ட பின்னரே இதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இதை மேம்படுத்திய பின்னர் மாடுகளும், காளைகளும் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பேசப்போவதை நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள் என்றும் சீடர்களின் பலத்த கரவொலிக்கு இடையில் நித்யானந்தா இந்த வீடியோவில் கூறுகிறார். #Nityananda #Nityanandasoftware #cowsandBullstalk  #cowtalkTamil

    அந்த வீடியோவை காண... https://goo.gl/YjMpCf
    பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார். #nithyananda
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தா வின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகார் குறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்ட நீதிபதி உடனே நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஜாமீனில் அவர் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தார். இதையடுத்து நித்யானந்தாதாவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள்.



    அவரை தேடி ஆசிரமம் சென்றனர். அங்கு போலீசார் தீவிர சோதனை செய்தார்கள். ஆனால் நித்யானந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் மற்ற ஆசிரமங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 14-ந்தேதி நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராவார் என்று பிடதி ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.#nithyananda
    பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nithyananda
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு, கார் டிரைவர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட கோர்ட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பிறகு, நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா சாமியார் வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

    தொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தா சாமியாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Nithyananda
    மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பினராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. #MaduraiAdheenam #Nithyananda
    மதுரை:

    மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
    ×