search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன்"

    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.
    காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது.

    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

    பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், ஓரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரொளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    மாசாணியம்மன் கோவிலில் மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.
    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம்.

    மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.

    ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
    குமாரபாளையத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வைகாசி வெள்ளிக்கிழமையையொட்டி   குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. 

    இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன்   கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. 

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    ×