என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98416"

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

    டான்
    டான்

    இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் 'டான்' திரைப்படத்தின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படம் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

    புதிய படத்தின் போஸ்டர்
    புதிய படத்தின் போஸ்டர்

    இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ‘1947- ஆகஸ்ட் 16' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். 
     
    இப்படத்தை பற்றி இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களை சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

    இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்
    ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த் தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, “இந்திய சினிமாவின் "டான்" ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று பதிவிட்டிருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.20 படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘டான்’. இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் எஸ்.கே.20-யின் அப்டேட் வெளியாகியுள்ளது.  தெலுங்கு, ஜாதி ரத்னாலு படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்கும் இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

    எஸ்.கே.20

    எஸ்.கே.20 படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று எஸ்.கே.20 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என  படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் 'விருமன்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘எஸ்.கே.20’ திரைப்படம் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படமானது ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    கார்த்தி - சிவகார்த்திகேயன்

    அதே தினத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள். தற்போது கார்த்திக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    பொம்மை - சிவகார்த்திகேயன்
    பொம்மை - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இதன் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
    ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    பொம்மை
    பொம்மை

    இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.


    டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் டான் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    சிவகார்த்திகேயனின் டான்

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு
    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், டான் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். அதன்படி அடாது மழையிலும் விடாது டப்பிங் செய்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டான் படம், தனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    டாக்டர் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் படத்தின் அப்டேட்டை சூரி கொடுத்து இருக்கிறார்.
    டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்த படம் டான். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    சூரி
    சூரி - இயக்குனர் சிபி சக்ரவர்த்தி

    இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூரி, தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார், என இயக்குனர் சிபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் - ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகி இருக்கும் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என தலைப்பு வைத்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

    டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.



    அடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா. 

    காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.



    வில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’  பொழுதுபோக்கு.
    ×