என் மலர்
நீங்கள் தேடியது "tag 99263"
- வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சூரி.
- இவரின் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. தமிழில் பல படங்களில் நடித்தாலும் இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சூரி
இவர் நடிகராக மட்டுமல்லாது அம்மன் என்ற உணவகங்களையும் நடத்தி வருகிறார். இந்த உணவங்கள் மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

அம்மன் உணவகம்
இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சோதனை நடந்துள்ளது. மேலும் உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்மன் உணவகத்தின் மீதான புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது.
- மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
- இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Title look of #DirectorRam's next #ProductionNo7 produced by @VHouseProd_Offl @sureshkamatchi starring @NivinOfficial @yoursanjali @sooriofficial will be out on October 11th at 12 PM 😊@eka_dop @UmeshJKumar @silvastunt @johnmediamanagr#PattanamRasheed #ChandrakantSonawane pic.twitter.com/QIxGCL2Zma
— Raja yuvan (@thisisysr) October 8, 2022
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விடுதலை
இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை
இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது . இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சூரி.
- இவரின் அம்மன் உணவகத்தில் சில தினங்களுக்கு முன்பு வணிகவரித்துறை சோதனையில் ஈடுப்பட்டனர்.
மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் போலி பத்திரம் ரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. யாரெல்லாம் நிலத்தை பறிகொடுத்துள்ளார்களோ, அவர்கள் அதிகாரிகளிடம் மனுவாக அளித்து தன்னுடைய நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.
வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருவாயும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ.8300 கோடி வருவாயும் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.

யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை
இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது.
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stills from the sets of #VetriMaaran's #Viduthalai.@sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @RedGiantMovies_ @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/0i39mii4nB
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2022
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

விடுதலை
இந்நிலையில் விடுதலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை
விடுதலை இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை
மேலும் கொடைக்கானலில் படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பல்கேரியாவில் இருந்து தமிழகம் வந்திருக்கும் ஸ்டண்ட் டீம் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் இந்த ஆக்ஷன் காட்சியை அமைக்கின்றனர். விடுதலை படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி விடுதலை படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Excited to announce our next release #Viduthalai, in association with #VetriMaaran & @rsinfotainment.🙌✨@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @kalaignartv_off @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/WgjbUVEnBq
— Red Giant Movies (@RedGiantMovies_) September 1, 2022
- தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர் சூரி.
- இவர் நடிப்பில் சமீபத்தில் ‘விருமன்’ திரைப்படம் வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான சூரி தற்போது இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் "விடுதலை" படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான "விருமன்" படத்தில் சூரியின் காமெடி ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

சூரி
இதையடுத்து 'விருமன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் கடந்த 3-ந்தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் சூரி, "ஆயிரம் கோவிலை கட்டு வதைவிட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது" என்று பேசினார். நடிகர் சூரியின் இந்த பேச்சுக்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
அதன்பின்னர் தனது பேச்சு குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்தார். அதில், "நான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. நான் எந்த வேலையை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்துதான் தொடங்குவேன். நான் நடத்தும் ஓட்டலுக்கு அம்மன் என்றுதான் பெயர் வைத்துள்ளேன்.

சூரி
நான் கூறியதை சிலர் தவறாக எடுத்துள்ளனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் படிக்காதவன் என்பதால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் அதை கூறினேன். நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூரி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. சூரியின் கருத்துக்கள் சர்ச்சையானதால் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

சூரி
இந்நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார். அதன் பின், மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் பேசினார்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’.
- இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

சூர்யா - விஜய் சேதுபதி
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா - விஜய் சேதுபதி
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன்பு தனது தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியது வைரலாகிறது.
மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, லிங்குசாமி, தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர்.
இப்படத்தின் கதையை இயக்குனர் மணிபாரதி கூறும்போது, இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சினை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா, தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சினை என்றால் தவித்துவிடுவோம்.

சூரி
ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானாலும் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம். இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சூரி பேசினார்.