search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tajmahal"

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    மேலும், காதலர்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலில் உள்ள ஷாஜகானின் கல்லறை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • நிலுவையில் உள்ள நிலுவைத்தொகையும் அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்ட விதிகளை பின்பற்றி சில இடங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் முறையாக சொத்து வரி மற்றும் குடிநீர் செலுத்தவில்லை என கூறி ஆக்ரா மாநகராட்சி சார்பில் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டில் குடிநீர் வரியாக ரூ.1.9 கோடியும், சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் செலுத்துமாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தொல்லியல்துறை கண்காணிப்பு அதிகாரி ராஜ்குமார் பட்டேல் கூறுகையில், நினைவு சின்னங்களுக்கு சொத்துவரி பொருந்தாது. மேலும் அங்கு தண்ணீரை வணிக ரீதியாக பயன்படுத்தாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோட்டீஸ் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

    இதுதொடர்பாக நகராட்சி கமிஷனர் நிகில் பன்டே கூறுகையில், மாநிலம் தழுவிய புவியியல் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

    நிலுவையில் உள்ள நிலுவைத்தொகையும் அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளை பின்பற்றி சில இடங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொல்லியல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்கில் அவர்களிடம் இருந்து பெறப்படும் பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உதவி நகராடசி ஆணையரும், தாஜ்கஞ்ச் மண்டலத்தின் பொறுப்பாளருமான சரிதாசிங் கூறுகையில், செயற்கை கோள் படங்கள் மேப்பின் மூலம் தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனறார்.

    ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாக்கும் பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் பரிந்துரையை உ.பி. மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

    உ.பி. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உங்களால் தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். முதல் மந்திரி நாற்காலியை இதுபோல் தனியார் நிறுவனத்துக்கு அளித்து பாதுகாக்க செய்ய முடியுமா? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது. #TajMahal
    புதுடெல்லி:

    உலகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் விரும்புவது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக, டிரிப் அட்வைசர் எனும் தனியார் அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. அதில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 68 நாடுகளில் உள்ள 759 முக்கியமான இடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.



    இந்த ஆய்வில் உலகளவில் முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்படி, முதல் இடத்தை கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஸ்பெயினில் உள்ள பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், ஆசிய அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை தாஜ்மகாலும், ஒன்பதாவது இடத்தை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், 10-வது இடத்தை பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TajMahal
    ×