என் மலர்
நீங்கள் தேடியது "Tambaram Air Force Base"
- 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
- போர் விமானியாக நியமிக்கப்பட்டார்.
தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. தலைமை மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு முழு மரியாதையுடனும் இராணுவ மரபுகளை பின்பற்றி நடத்தப்பட்டது.
ஏர் கமாடோர் தபன் சர்மா டிசம்பர் 1997-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் பறக்கும் பிரிவில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏ வகை தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் ஆவார். மேலும், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் சேவைகள் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
இந்திய வான்படையின் பல்வேறு வகையான விமானங்களில் 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். தனது 25 ஆண்டுகால வாழ்க்கையில், இரண்டு போர் விமான ஸ்குவாட்ரன்கள், விமானப்படையின் விமானப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்துள்ளார்.
- விமானங்கள், நெருக்கமாக சீறிப் பாய்ந்து பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.
- விமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாம்பரம்:
இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சுகோய் 30 ரக போர் விமானம், சூ-30 ரக விமானம், போர் ஜெட் விமானம் உள்பட பல்வேறு வகையான விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் சீறி பாய்ந்து சென்று சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

முன்னதாக விமானப்படையின் மெக்கானிக்கல் பிரிவு பயிற்சியாளர்கள், வான்வீரர் பயிற்சிக் குழுவினர் பங்கேற்று தற்காப்பு கலை, உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவை செய்து காட்டினர். பத்து வகையான விமானங்கள் இடம் பெற்ற கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.