என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu govt"
- நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும்.
- கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின் (CGF) கீழ் ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான அண்ணாமலை நகர் பேரூராட்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் பரங்கிபேட்டை, நகராட்சி, குமாராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் பரங்கிபேட்டை, குமராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, நக்கரவந்தன்குடி, டி.எஸ்.பேட்டை, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலாபாடி, பெராம்பட்டு, சிவபுரி மற்றும் வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 2 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் 2,078 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கூடிய கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் ரூ.255.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் 14.12.2022-ல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
- பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்படடுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
மேலும், திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.
- தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர்.
பல்லடம் :
பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர். கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.
எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்ககவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும்
சென்னை:
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த கல்வி ஆண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தமது படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளியின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தால் அக்குழந்தையின் பெற்றோரை மேலாண்மை குழுவினர் சந்தித்து பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தொடருதல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
- அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
- மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
மின்சாரக் கட்டண உயர் வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதே போல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70 சதவீத மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை.
எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை.
- முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
- நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது.
சென்னையின் முக்கியமான அடையாளமான ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலத்தின் அருகில் 1976-ம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது. அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது.
அண்ணா மேம்பாலம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 1971-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தை கடந்தது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியது. சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
குறிப்பாக அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் 1970-ம் ஆண்டுகளில் தினமும் 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் விளைவாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கின. 1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுவாகும். மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இதுவாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த பாலத்தை கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.66 லட்சம் ஆகும்.
இந்த மேம்பாலத்தை 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு 'அண்ணா மேம்பாலம்' என்றும் பெயர் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையும் நிறுவப்பட்டது.
பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் அவரது சிலையை நிறுவ அப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். கோரிக்கை வைத்தார். அதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்தார். சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன.
இந்நிலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு நாளை (சனிக்கிழமை) 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனாலும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிப்பதுடன், சென்னையின் அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்கிறது. சென்னை தற்போது மேம்பாலங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முதன் முதலில் வித்திட்டது அண்ணா மேம்பாலம் தான். அண்ணா மேம்பால சந்திப்பில் இன்று 3 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த மேம்பாலம் தற்போது ரூ.8.85 கோடி செலவில் சீரமைத்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிந்து விடும். அதன் பிறகு அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளமாக தொடர்ந்து புதுப்பொலிடன் காட்சியளிக்கும்.
- காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையர் சத்யப்பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.
காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜீவ் குமார், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக காமினி, மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
- மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 சதவீதமாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னை யின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 220 கன அடி மட்டுமே வருகிறது. கடந்த வாரத்தில் தண்ணீர் வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்தது. ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறை.
- 2024ம் ஆண்டு தீபாவளி அக்போபர் 31ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான அரசு பொது விமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறையில் தமிழ்ப் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி ஆகிய 2 விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளிலும், 5 விடுமுறை திங்கட் கிழமைகளிலும், 3 விடுமுறை வெள்ளிக் கிழமைகளிலும் வருகின்றன.
மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறையும், ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தீபாவளி அக்போபர் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.

- சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
- மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.
திருப்பூர்:
பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.
குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.
தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.
- சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
- அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.
மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-
படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.
மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.
சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.