என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamil Newyear"
- இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
- இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.
கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பண்டிகை நாட்கள்
இங்கு முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்க ளில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்க இன்று வியாபாரி களும், பொதுமக்களும் சந்திப்பு பூ மார்க்கெட்டில் திரண்டனர். இதனால் விலையும் அதிகரித்திருந்தது. நேற்று ரூ. 700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ. 300 உயர்ந்து ரூ. 1,000-க்கு விற்கப்பட்டது.
ரோஜா
இதேப்போல் நேற்று ரூ. 500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ. 200 உயர்ந்து ரூ. 700-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ. 300-க்கும், சம்பங்கி ரூ. 200-க்கும், ரோஜா பூ 1 கட்டு ரூ. 150-க்கும், கேந்திப்பூ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.
தற்போது பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக பூக்கள் வந்துள்ளது. எனவே இன்று பூக்களின் விலை சிறிது அளவே உயர்ந்துள்ளது. எனினும் தேவை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்