என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil son Usain interview"

    • கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார்.
    • நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை :

    ேகாவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா தர்காவில் புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டியும், வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில் மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.

    39-வது மாவட்டமாக இன்று கோவைக்கு வந்துள்ளேன். மிக அதிகமான தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும்.

    இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அ.தி.மு.க. தான். உலமாக்களுக்கு ஒய்வூதியம் வழங்கிய கட்சி அ.தி.மு.க.

    ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும் மெக்கா மதினா செல்லவும், இஸ்லாமியர் வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அ.தி.மு.க. செய்து இருக்கின்றது. 21 ஆண்டுகள் இப்தார் நோன்பை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா .

    கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார். தி.மு.க. ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது.கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில்

    பாராளுமன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும்.பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×