search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilaga valvurimai katchi"

    தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் குடோனில் இருந்து கடந்த மாதம் 1-ந் தேதி மதுபான பாட்டில்களை ஏற்றிய லாரி சென்றது. வெள்ளபொம்மன்பட்டி பிரிவில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் லாரியை மறித்து தீவைத்தனர். இதில் மதுபாட்டில்களுடன் லாரி எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்காக வேல்முருகன் இன்று வேடசந்தூர் வந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போட்டு தமிழக அரசு சிறையில் அடைக்கின்றது. எங்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.


    காவல் துறையை கையில் வைத்து கொண்டு காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அதற்கு தமிழக அரசும் துதிபாடி வருகிறது. பாரதிய ஜனதா உதவியுடன் தமிழக அரசு கைகோர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan #BanwarilalPurohit
    சுங்கச்சாவடி தாக்குதல் மற்றும் என்.எல்.சி முற்றுகை வழக்கில் ஜாமின் கிடைத்ததை அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல் முருகன் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த மாதம் 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதற்கிடையே, இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி வேல்முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.

    இதனை அடுத்து, மாலை புழல் சிறையில் இருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார். 
    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.

    கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.

    அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந் தார். வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியாண்டிகுழியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிகம்பம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ஜெகனை கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ஜெகனின் உடல் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியாண்டிகுழிக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி அஞ்சு, அவரது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பெரியாண்டிகுழிக்கு வந்தார். ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஜெகன் மனைவி அஞ்சுவிடம் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனது தலைவர் வேல்முருகனுக்காக ஜெகன் தீக்குளித்து இறந்துள்ளார். இனி யாரும் தீக்குளிக்காதீர்கள். எல்லோரும் வாருங்கள் இணைந்து போராடுவோம். வேல்முருகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். ஜெகன் மரணத்துக்கு எடப்பாடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    திண்டுக்கல் அருகே பெட்ரோல் ஊற்றி மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியை தீ வைத்து கொளுத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி பகுதியில் டாஸ்மாக் குடோன் உள்ளது இங்கிருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வடமதுரை நோக்கி ஒரு லாரி வந்தது. திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் தாமரைப்பாடியை அடுத்துள்ள வெள்ள பொம்மன்பட்டி பிரிவு அருகே லாரி வந்த போது 2 கார்களில் வந்த 7 பேர் அதனை மறித்தனர்.

    பின்னர் லாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அப்போது எங்கள் கட்சி தலைவர் வேல்முருகனை சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு கண்டனம், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    லாரி தீ பிடித்து எரிந்ததை பார்த்ததும் டிரைவர் சின்னதம்பி (வயது 22) அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் லாரியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் டிரைவர் சின்னதம்பி புகார் அளித்தார். 2 கார்களில் வந்த 7 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியை கட்டி இருந்ததாகவும், அவர்கள் வந்த காரின் எண்ணையும் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனைத்து செக் போஸ்டுகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    கடலூர்:

    கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் திடீரென ஏறினார்.

    அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுந்தரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    சுந்தரின் மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவரை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர்.

    இதையடுத்து டவரில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மங்களமேடு:

    தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் காயம் அடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    மாவட்ட செயலாளர் உலக செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவகுமார், ராமர், ராதாகிருஷ்ணன், மணிகண்டன் உள்பட 36 பேர் கலந்து கொண்டனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்து மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.
    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று சுதேசிமில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி ஸ்டெர் லைட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்த தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று புதுவை சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்னாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், ம.தி.மு.க. கபிரியேல், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் அங்கு செட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் பண்ருட்டி வடக்குஒன்றிய செயலாளர் கொக்கு பாளையம் பாலமுருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×