என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamira Sabha"

    • நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது.
    • அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனித் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்து ள்ளது ராஜ வல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில். இங்கு மூலவராக ஸ்ரீ நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள் பாலித்து வருகின்றனா்.

    கொடியேற்றம்

    இங்குள்ள நடராஜா் சன்னதி தாமிர சபை என்று அழைக்கப்படுகின்றது. மகா விஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகியோர்களுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்பு டையது ஆகும். அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனித் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகன ங்களில் வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நடைபெற்று தொடா்ந்து சிகப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடை பெற்றது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிசேகமும், பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து சுவாமி செப்பு கேடையத்தில் தேருக்கு எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கோவிலில் 4 ரதவீதிகளையும் வலம் வந்து நிலையத்தை அடைந்தது. தேரோடும் வீதிகளில் சிவபக்தர்கள் பஞ்சவாத்தியம் வாசித்து தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தில் பல்வேறு கிராமமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×