என் மலர்
முகப்பு » Tanisha Crasto - Ashwini Ponnappa
நீங்கள் தேடியது "Tanisha Crasto - Ashwini Ponnappa"
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் போட்டியில் வெற்றி.
- கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி மோதியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தியது.
தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடி உடன் மோத உள்ளது.
அதே சமயம் நேற்று நடந்த பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
×
X