search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanjore district"

    • கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு.

    தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.
    • இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பால. சந்திரசேனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய பி.எஸ்.என்.எல். இணையதளத்தின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்படவுள்ளது.

    இந்த மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி மற்றும் 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள் மற்றும் பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.

    பி.எஸ். என்.எல் பைபர் இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் வெகுவிரைவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் முழு அளவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #hraja #bjp

    கும்பகோணம்:

    மதம் மாற்றம் செய்வது குறித்து எதிர்த்து பேசியதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து திருபுவனம் பகுதியில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை திருபுவனம் வந்தார். பின்னர் ராமலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மகன்கள், மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத மாற்றம் குறித்து கேள்வி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர் பேசியது நியாயமாக தான் பேசி உள்ளார். கொலை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.

    நான் ராமலிங்கம் வீட்டுக்கு செல்லும் வழியை போலீசார் தடை செய்தனர். மாற்று வழியில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. கொலை குற்றவாளிகளை போலீசார் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.

    தமிழகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் குரல்கொடுக்க மாட்டார்கள். ராமலிங்கம் கொலையை கண்டித்து இவர்கள் ஏதும் கூறவில்லை. திராவிட கட்சிகள், இந்து மதத்தை அழிக்கும் செயலை செய்து வருகின்றன.

    கேரளாவில் நடந்த தேர்வில் இஸ்லாமிய மதம் குறித்த கேள்வியை தயாரித்த ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது. இதேபோல் தான் ராமலிங்கத்தின் கொலையும் நடந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள், சமுதாய அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் கூறியுள்ளார். #GajaCyclone #CentralCommittee

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மத்திய குழு ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மத்திய குழுவிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

    எங்கள் பகுதியில் விசைபடகுகள், நாட்டுப்படகுகள், அதிக அளவில் சேதமாகி உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றனர்.

    பின்னர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை இன்று காலை முதல் ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralCommittee

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயல் பாதிப்பால் ரூ.35-க்கு விற்ற குடிநீர் கேன்கள் தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிப்பால் டெல்டா மாவட்டங்களில் இன்றும் 3-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மட்டுமே மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமங்களில் மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. ஆங்காங்கே முறிந்து கிடக்கும் மரங்களால் மின்கம்பங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேன்களை வாங்கி மக்கள் சமாளித்து வருகின்றனர்.

    தற்போது குடிநீர் கேன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிகவிலைக்கு விற்று வருகின்றனர். ரூ.35-க்கு விற்ற குடிநீர் கேன், தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயலின் ருத்ரதாண்டவத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் காற்றில் முற்றிலும் சேதமானது. நகரில் பெரும்பாலான மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. மின்கம்பங்கள் உடைந்தும், ஒயர்கள் அறுந்தும் கிடக்கின்றன.

    பட்டுக்கோட்டை தென்னை சார்ந்த விவசாயம் அதிக அளவில் இருப்பதால் தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்துவிட்டன. புயல் கரையை கடந்த பின்பும் பட்டுக்கோட்டை நகர் பகுதிகளில், எந்த தெருவுக்கும் போகமுடியாத நிலையில் மின் கம்பங்களும், பெரிய பெரிய மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள், நகரில் பல இடங்களிலும் விழுந்து சிதறி கிடக்கிறது. நகரில் பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தெருக்களில் விழுந்துள்ள மரங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் பொதுமக்களால் அதனை வெட்டி அப்புறப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மரம் அறுக்கும் இயந்திரங்கள், மரத்தை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தை விரைவாக செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பட்டுக்கோட்டை நகரில் 30 ரூபாய் விற்ற தண்ணீர் கேன்கள் 100 முதல் 150 ரூபாய்வரை விற்கின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் உள்ளதால் நகராட்சி குடிநீர் குழாய்களின் விரிசல்களில் வழியும் தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. #GajaCyclone
    தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் அதனை தடுக்க போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் குட்கா விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த சட்டங்களை மீறி சில இடங்களில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அடிக்கடி பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் தஞ்சை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய போது சீனிவாசன் (வயது 55) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தஞ்சை தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் புன்னை நல்லூரில் நடத்திய சோதனையில் பாலாஜி (35) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாடு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் சீனிவாசராகவன் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது புகாரி (48) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 15 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    பந்தநல்லூர் சப்-இன்ஸ் பெக்டர் நடராசன் பந்தநல்லூர் பகுதியில் கடைகளில் நடத்திய சோதனையின் போது சீனிவாசன் (31) என்பவரின் கடையில் இருந்து 5 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

    இது தொடர்பாக வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×