என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tarapuram"

    • ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும்.
    • விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

    தாராபுரம்:

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையை சேர்ந்த 80 பக்தர்கள் நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக வரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பவானியை சேர்ந்த ராமன் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி,சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    விபத்தில் சிக்காமல் இருக்க பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

    • இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
    • வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.

    வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

    2026 சட்டமன்ற தேர்தலில் இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
    • அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது.

    தாராபுரம்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது. தாராபுரத்தில் பழைய காவல் நிலைய வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது .

    நிகழ்ச்சிக்கு முன்பாக மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 லிட்டர் பாலினை தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தலையில் சுமந்து சோலை கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ×