search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tawheed Jamaat"

    • தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்டத்தலைவர் இப்ராகிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக்சாகிப், துணைத்தலைவர் யாசர்அரபாத், துணை செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்தீக் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலர் அன்சாரி, மாநில பொதுச்செயலர் அப்துல் கரீம் பேசினர்.

    தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் வாசித்தார். இதில் மணிப்பூர் கலவரத்தில் பாதித்தோருக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொது சிவில் சட்ட முன்னெடுப்பை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மாவட்டச்செயலாளர், தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை யகத்தில் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமயில் நடந்தது.

    மாவட்ட தலைவர் இப்ராகிம் சாபிர், மாவட்ட செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜபுதீன், உஸ்மான், மீரான், கீழை சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தில் புகழ்பெற்ற சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதன், தர்மபுரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி களின் அங்கீகாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். மத்திய அரசின் இந்த ேபாக்கால் மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள்.

    மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்டச்செயலாளர், (ஊடகத்தொடர்பு) தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ லோசனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள்கூட்டம் திருப்பூரில் உள்ளஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், 15வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில்இயங்கி வரும் பள்ளிவாசலை மூட முயற்சிக்கும் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிப்பதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுஉரிமையை தமிழக அரசுபாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    • நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதாவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதாவினரையும், அதற்கு போராடிய மக்களின் வீடுகளை இடித்த உத்தரபிரதேச அரசையும், போராடியவர்களை சுட்டுக்கொன்ற ஜார்க்கண்ட் அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பாரூக் கண்டன உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான், துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ், துணை செயலாளர்கள் காஜா, அப்துல் ரசீது, நூர்தீன், ரபீக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா நன்றி கூறினார்.

    ×