என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea"

    வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில் தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் பேரில், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் தா.பழூர் கடைவீதியில் நள்ளிரவுக்கு மேல் வரும் அனைத்து கனரக, இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில், அவர்களை முகத்தினை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், மீண்டும் ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்ல இருப்பதாலும் அதன் ஓட்டுனர்களுக்கு சோர்வை நீக்கும் வகையில் நள்ளிரவுக்கு மேல் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களின் முகங்களை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், ராமதாஸ் உள்பட போலீசார் கலந்துகொண்டு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள டிரைவர்களிடம் அறிவுரை வழங்கினர்.

    போலீசாரின் இத்தகைய செயலைக்கண்டு டிரைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வியந்தனர். மேலும் இதேபோல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
    திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
    தஞ்சை :

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது 70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

    நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான வெந்தய டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம்.
    வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    வெந்தய டீ தயாரிப்பது எப்படி?


    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள். இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் பார்க்கலாம்.

    நன்மைகள்


    மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.



    கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

    வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

    வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

    உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

    வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம். இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 7
    இஞ்சி - 2 துண்டு
    பட்டை - 2 இன்ச்
    தண்ணீர் - 1 லிட்டர்
    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை  :

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

    வடிகட்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சுக்கு - 20 கிராம்,
    தனியா - 20 கிராம்,
    இஞ்சி - 30 கிராம்,
    திப்பிலி - 1 டீஸ்பூன்,
    புதினா - ஒரு கொத்து,
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
    பனை வெல்லம் - 200 கிராம்,
    தண்ணீர் - 1 லிட்டர்.



    செய்முறை

    வெறும் கடாயில் தனியாவை வறுத்து ஆறியதும இடித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு மிக்சியில் புதினா, சிறிது நீர் விட்டு அரைத்து புதினா சாறு எடுத்து கொதிக்கும் தேநீரில் ஊற்றவும்.

    இறுதியாக பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.

    சூப்பரான மூலிகை தேநீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புதுவை அமைச்சர்கள் ரூ.3 கோடி ‘டீ’ செலவு செய்துள்ளனர் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார். #bjp

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி என்ற காரணத்தை கடந்த 2½ ஆண்டாக கூறி வருகின்றனர். இதனால் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியைக்கூட வழங்கவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக ஒரே ஒரு முதியோருக்குகூட பென்‌ஷன் வழங்கவில்லை.

    சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சபாநாயகர் சைக்கிளில் வருகிறார். 2½ ஆண்டில் 20 நாட்கள் தான் சட்டசபை நடந்துள்ளது. எப்போது சட்டசபைக்கு சென்றாலும் அமைச்சர்களின் அலுவலகங்கள் காலியாகவே உள்ளது.

    இப்படியிருக்க 2 ஆண்டில் மட்டும் டீ, காபி, சிற்றுண்டி, டெலிபோன் ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் ரூ.3 கோடியே 15 லட்சம் செலவு செய்துள்ளனர். இதுதான் அமைச்சர்களின் சிக்கனமா? இதுவும் உண்மையான செலவுக்கான கணக்குகள் தானா? என்பதில் சந்தேகம் உள்ளது.

    எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.20 ஆயிரம் டீசலுக்காக கொடுக்கின்றனர். ஆனால் அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் டீசலுக்காக தனியாக செலவு செய்து பில் கொடுக்கின்றனர். தொழில்துறை அமைச்சர் பிப்டிக்கில் பென்சில், பேனா உள்ளிட்ட ஸ்டே‌ஷனரி வாங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளார். வளமான புதுவையை வறுமையான புதுவையாக மாற்றியுள்ளனர்.

    சம்பளம் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2 கோடிதான் தேவைப்படும். ஆனால் அமைச்சர்கள் டீ செலவுக்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளனர். நிதி நெருக்கடியை காரணம் காட்டி பல ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அமைச்சரவையில் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதை பா.ஜனதா சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.

    லாட்டரியால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை ஆய்வு செய்ய கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. லாட்டரி ஆரம்பிப்பது தொடர்பாக மக்களிடம் கவர்னர் கருத்து கேட்க வேண்டும். நிதி நெருக்கடி என பொய் யான காரணத்தை கூறி வருகின்றனர்.

    தமிகத்தில் அரசே மணல் விற்பனை செய்யவுள்ளது. ஆனால் புதுவையில் மணல் விற்பனை உரிமையை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் சிலருக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் அரசே மணல் விற்பனையை செய்ய வேண்டும்.

    மணல் தட்டுப்பாடால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நகர அமைப்பு குழுமம் ஏழை மக்களுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் விதிமுறைகளை வகுக்கிறது.

    பாகூரில் விவசாய நிலத்தில் ஒரு மது பார் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் விதி மீறி மது பார் நடந்து வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள் எங்கும் எரியவில்லை. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் நிதி இல்லை என்கின்றனர்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்களின் செலவினம் தொடர்பாக ஆதாரத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் செய்யவுள்ளோம். மத்திய அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தலாம். மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை இன்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
    இஞ்சி- சிறிய துண்டு ஒன்று
    பால் - ஒரு டம்ளர்
    கருப்பட்டி - சிறிய துண்டு
    மிளகு  அரை டீஸ்பூன்
    தண்ணீர்  ஒரு கப்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

    பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம்.

    சூப்பரான ஆவாரம்பூ - கருப்பட்டி டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தெற்கு ரெயில்வேயில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல், ரெயில் களில் டீ மற்றும் காபி விலை ரூ.10 ஆக உயர் கிறது. #SouthernRailway #TeaCoffee
    சென்னை:

    நாடு முழுவதும் ரெயில்களில் டீ, காபி விலையை அதிகரித்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம், அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் வழியாக செல்லும் ரெயில்களில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    இதுவரை, 150 மி.லி. அளவுகொண்ட டீ மற்றும் காபி ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விலையில் இருந்து தற்போது ரூ.3 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 170 மி.லி. அளவுகொண்ட பேப்பர் குவளைகளில் 150 மி.லி. அளவு கொண்ட டீ, காபி இனிமேல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும்.

    அதேநேரம் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே தயார் செய்துகொண்டு வந்து விற்கப்படும் டீ ரூ.5 என்ற விலையிலே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.

    இதைப்போல, ரெயில்களில் விற்பனை செய்யப்படும் பிற உணவு பண்டங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதுவை நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகரத்தின் முக்கிய வணிக பகுதியான காந்தி வீதி,நேரு வீதி, மி‌ஷன் வீதி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட டீ,காபி கடைகள் உள்ளன.

    நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டீயின் விலை ரூ. 12-ம் காபியின் விலை ரூ. 20 என உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீ விலை ரூ. 10-க்கும் காபி ரூ. 15-க்கும் விற்கப்பட்டது. தற்பொழுது ரூ 2 உயர்த்தப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாகவே டீ,காபி விலையை 4 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தி இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அன்றாட வாழ்க்கையில் ஏழை, நடுத்தர மக்களின் உற்சாக பானமாக டீ ,காபி உள்ளதால் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை என்று அதனை அருந்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    புதினா டீ செரிமானத்திற்கு உதவும். நரம்பு மண்டலத்திற்கு சிறந்த பானம். ஆன்டி கொலஸ்ட்ரால் தன்மை கொண்டது. இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா இலை - 7,
    தேயிலை - ஒரு டீஸ்பூன்,
    தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்,
    பால் - கால் டம்ளர்.
     


    செய்முறை :

    ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

    விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

    பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள்.
    பலருக்கு ஒரு குறை இருக்கின்றது. அது என்னவெனில் அவர்களுக்கு காபி குடிக்காமல் இருக்க முடிவதில்லை என்ற குறைதான். காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

    காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

    அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

    நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

    நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
    அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

    டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள். 
    ×