என் மலர்
நீங்கள் தேடியது "Teachers fast"
- 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏரானமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றவர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் சத்தியானந்தன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் பானுமதி வரவேற்று பேசினார். முன்னாள் மாநில தலைவர் சுதாகரன் மாநில துணை செயலாளர் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர்.மாவட்ட செயலாளர் குப்புராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமத்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்விக் கொள்கைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே ஒரு கொள்கை என்ற 7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெரும் வகையில் அரசு நேரடியாக அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலும் ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தொல்லைக்கு ஆளாகி பாதுகாப்பு பெற்ற நிலையில் உள்ளனர் டாக்டர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.