என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teachers Recruitment Board"
- 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
- அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
- விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
சேலம்:
தமிழக தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதைத்தவிர போட்டித்தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.
இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- இந்த பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியே நடத்தப்பட உள்ளது.
- அது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. அது தொடர்பான விரிவான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் மொழி தகுதி தாள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே 'பகுதி ஆ' பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர்கள் பங்கு பெற்று பணி நியமனம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளில் தமிழ் தாள் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தியது. இந்த தகுதித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அதற்கு அடுத்தபடியாக எழுதியிருக்கும் பொதுப்பாட பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்