search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teachers Union Reception"

    • முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்றுள்ளது.
    • தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.

    ராமநாதபுரம்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை வரவேற் றுள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி மதுரை அரசுப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் காலையிலேயே வீட்டிலி் இருந்து புறப்பட்டு விடுவ தால், பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, கிராம புறங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிகாலை யில் விவசாயம் போன்ற வேலைகளுக்கு செல்வதால், அந்த பெற்றோர்களின் குழந்தைகள் காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்-அமைச்சரால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடின்றி இருப்பார்கள்.

    17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவு திட்டத்தை மாநிலத்தலைவர் தியாகராஜன் தலைமையிலான தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×