என் மலர்
நீங்கள் தேடியது "Technical Issue"
- ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை.
- டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளமும், செல்போன் செயலியும் முடங்கியது.
டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகும். இணையதளம் செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட் கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறினர்.
மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை.
- கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.
இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
- புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
- விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷ்ரத்தா தாசும் உடன் பயணித்தார்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான பிரபல டாடா குழுமம் இயக்கி வரும் விமான போக்குவரத்து சேவை நிறுவனம், விஸ்டாரா (Vistara).
விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பயணம் செய்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதள கணக்கில் "மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்" என தலைப்பிட்டு பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் (Shraddha Das) பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- விமானத்தை மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
- பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 172 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானத்தை உடனடியாக விமானி நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும்போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை விமானி உணர்ந்ததை தொடர்ந்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து அவசரமாக நிறுத்தினார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
மேலும், விமானத்தில் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 5 மணிக்கு புறப்புடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது.
- ராக்கெட் ஏவுதலுக்கு இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த 2 செயற்கை கோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இது நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்கியது. இதனை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.