search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technical Seminar"

    • தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சின்னமனூர் வருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். விழாவிற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அவிநாசி லிங்கம் பல்லைக்கழக துணை வேந்தர் பாரதிஹரிசங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் சேக்மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கருத்தரங்கில் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • துறைத்தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்து பேசினார்.
    • கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. 2-ம் ஆண்டு மாணவி ஷ்ரியா வரவேற்று பேசினார். துறை மன்றம் குறித்த தகவல்களை மாணவர் மலையரசு தொகுத்து வழங்கினார். கல்லூரி டீன் பரமசிவம் மற்றும் துறைத்தலைவர் வே.கலை வாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் சென்னை, காக்னி சன்ட் நிறுவனத்தின் மேலாள ரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான சுந்தர ராஜ பெருமாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாணவர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தி பேசினார். துறைத் தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்த தகவல்கள் குறித்து பேசினார். இணையதள வடிவமைப்பாளருக்கான தகுதிகள் மற்றும் அந்த துறையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான வழிமுறை கள் குறித்தும் சிறப்பு விருந்தினர் சுந்தர ராஜ பெருமாள் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப துறைகளிலும் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முடிவில் மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்.

    கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் கே.காளி தாச முருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கி ணைப்பாளர் ராம்பிரியா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

     கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறை சார்பாக சாரியஸ் 2023 என்ற தலைப்பில் தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.

    கருத்தரங்கில் மாணவர்களின் தனித்தி றமையை வெளிப்படுத்தவும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான வழிமுறை களை செயல்படுத்தவும் ஆலோ சனைகளை மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மாணவர் களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீராண்டீஸ்வரி புவனேஸ்வரி, மஞ்சுளா, இந்துமதி, ஆதித்யன் மற்றும் லட்சுமிபிரியா செய்து இருந்தனர்.

    இதில் பல்வேறு துறையின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொழில்நுட்ப துறையின் பேராசிரியை மாலதி நன்றி கூறினார்.

    • மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.
    • மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரா னிக் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை சார்பாக டெக்னோ ஸ்பார்க் 2023 பெயரில் தொழில்நுட்ப சிம்போசியம் எனும் கருத்தரங்கம் கடந்த 4, 5-ந் தேதி நடைபெற்றது.

    தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜய கிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.

    அதனைத் தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்ற பல்வேறு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்நுட்பம் அல்லாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிறைவு நாளான  நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார். மேலும் மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். பின்னர் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் இந்திய எம்.யூ.என்.எஸ்.எஸ். எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பத்மநாபன் மற்றும் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு இடையே பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொறியியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை தலைவர் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    கோவில்பட்டி:-

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு சார்பாக 'ரெய்னாக்ஸ்-23' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 2 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரியின் முன்னாள் மாணவரும் நெல்லை, ஆல்பா பிசினஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இயக்குனர், மொபியோனிக்ஸ் ஏஐ-யின் இணை நிறுவனருமான பி.சிவகுரு ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தற்போதைய தொழில்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அவர் தகவல் தொழிநுட்ப துறை கூட்டமைப்பிற்கான யூடியூப் சேனலையும், காணொலியையும் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் இயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால போக்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சிதம்பரம் இ-காமர்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்ஹோம் அப்ளிகேஷன்களில் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பேசினார்.

    இரண்டாம் நாளில், மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிககள் நடத்தப்பட்டது, மேலும் மாணவ- மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தனர். இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முன்னதாக, மாணவி ஆர்த்தி வரவேற்றார். மாணவி ஆர்த்தி அபிராமி கருத்தரங்கம் பற்றி எடுத்துரைத்தார். மாணவர் ஆனந்த் விழா தலைமையுரை வழங்கினார். மாணவி கரிஷ்மா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இறுதியாக மாணவி கவிதா நன்றி கூறினார்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படியும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் கே.ஜி.ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலின்படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, ரம்யா, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ×