search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technicians"

    • 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும்.
    • மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.

    அவரை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நகர்மன்ற தலைவர் சோழராஜன், திமுக நகர செயலாளர் வீரா.கணேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.

    விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் அவரிடம் மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் டாக்டர் வி.பால கிருஷ்ணன், மிட்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி வே ல்முருகன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், சிரில் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இருதய நோய் டாக்டர் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும். 2019 ம் ஆண்டில் இடிந்துபோன கட்டிடத்துக்கு மாற்றாக சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதிய கட்டிடம் கட்ட வேண்டும், எம்.ஆர். ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும், மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வே ண்டும்.

    லேப்ராஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டும், பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டன.

    ×