என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Technology Park"
- மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.
பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.
மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.
இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.
இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு
- படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் அப்துல்லா புரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டப்படுகிறது.
இந்த பணிகளை ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என பல பலமுறை நான் பேசி உள்ளேன். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
அதன்பின்பு 2-வது பகுதி கட்டதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த டைட்டில் பார்க்கில் அணைக்கட்டு தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து நரசிங்கபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்