என் மலர்
நீங்கள் தேடியது "Teenager falls and dies"
- சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
- தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் பிடில்முத்து தெரு வை சேர்ந்தர் பாதுஷா. இவரது மகன் சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
பரிதாபமாக இறந்தார்
இந்த நிலையில் நேற்று சாகில் அலங்காநத்தம் சென்று விட்டு தனியார் பஸ்சில் நாமக்கல் நோக்கி வந்தார். தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
இதில் பலத்தகாயம் அடைந்த சாகில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் மீது வழக்கு
இது குறித்து அவரது தந்தை பாதுஷா நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இளைஞர் பஸ்சில் இருந்து வெளியே விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.