என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tekasi"

    • தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர்கள் மட்கும் , மட்காத குப்பை பற்றி விளக்கம் அளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சியின் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் பள்ளி முதல்வர் ஏசுபாலன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு மட்கும் குப்பை, மட்காத குப்பை பற்றி விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயன்படுத்திய பின் இருக்கும் கழிவு பொருட்களை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து நகராட்சி பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர் கேட்டு கொண்டனர். மாணவ-மாணவிகள் தங்கள் வீட்டில் உள்ள கழிவு பொருட்களை தரம் பிரித்து கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.

    ×