என் மலர்
நீங்கள் தேடியது "Telugu"
- நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன்.
- வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".
பிரபல இயக்குனர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, தீய வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பல, அரண்மனை 2, ஆக்ஷன் , கலகலப்பு 2, உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படங்களாகும்.
நகைச்சுவையாக படங்கள் இயக்கி ரசிகர்கள் மனங்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கிய 'அரண்மனை 4' படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'அரண்மனை 4' படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சுந்தர் .சி பேசியதாவது :-
ஒரு தயாரிப்பாளர் என்னை ஒரு படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை 'ரீமேக்' செய்யலாம் என கூறினார். நானும் அந்த தெலுங்கு படத்தை பார்த்தேன். அப்படத்தை பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் என்னுடைய 3 படங்களை காப்பியடித்து அந்த தெலுங்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.

"என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் 'காப்பி' அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து உருவாக்கிய படம்தான் 'வின்னர்'.
வின்னர்' படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு 'வந்துட்டேன்' என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்".

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் 'வின்னர்' படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்து இருந்தனர்".
நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார்.
- இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் தமிழ் குரல் என்ற செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
சீரிஸின் டீசரைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.
இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு
- பாகுபலி 3' பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
2015 -ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் 'பாகுபலி' படம் வெளியானது. இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கினார். இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.
இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். 3-டி தொழில் நுட்பத்தில் ரூ.250 கோடியில் இப்படம் உருவானது. இந்திய திரைப் படங்களில் பாகுபலி' படத்தின் 2 பாகங்களும் உலக அளவில் சுமார் ரூ. 2000 கோடி வசூல் பெற்றது.

இப்படம் தமிழ் ,இந்தி, மலையாளம் மொழிகளிலும் 'டப்பிங்' செய்யப்பட்டு ஒரேநேரத்தில் திரையிடப்பட்டது. மேலும் அதைத்தொடர்ந்து வெளியான 'பாகுபலி 2 ' படம் வசூல் சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படம் 'டப்பிங்'செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை குவித்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3 - ம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது 'பாகுபலி' படத்தின் 3 - ம் பாகத்தை இயக்க இருப்பதை இயக்குனர் ராஜமவுலி. உறுதி செய்துள்ளார்

இதுகுறித்து ஐதராபாத்தில் இயக்குநர் ராஜமவுலி கூறியதாவது :- "பாகுபலியை உருவாக்கிய நகரம் என்பதால், ஐதராபாத் எனது இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு.பாகுபலி 3' பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'அபராஜிதடு' (அந்நியன்) பெயரில் வருகிற 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகிறது.
- இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.
கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் அந்நியன். இதில் பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் நடித்தனர். இப்படம் நகைச்சுவை, காதல், அதிரடி த்ரில்லர் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் சார்பில் தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

இப்படம் ஓர் அப்பாவியான அம்பி சமூகத்தில் அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் சட்டத்திற்கு புறமான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடுபவர். இதனால் அனைவரும் இவரை இகழ்ந்து கேலி, கிண்டகள் செய்து "ரூல்ஸ் ராமானுஜம்" என அழைத்தனர்.
இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்குள் "அந்நியன்" என்னும் ஒரு ஆக்ரோசமான குணாதியசம் கொண்டுள்ள பிரமை ஒன்று உருவாகிறது. இவரால் சமாளிக்க முடியாத நேரங்களில் அந்த அந்நியன் இவருக்குள் இருந்து வெளிவந்து போராடுகிறார்.
சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் தவறுகளை செய்து வரும் சில குற்றவாளிகளை அந்நியனாக மாறி கருட புராணத்தின் படி தண்டனைகளை அளித்து வருகிறார், அம்பி. இதனை காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் மற்றும் சாரி (விவேக்) கொலைகளை பற்றி புலனாய்வு செய்து வருவார்கள்

அம்பி ஒருதலையாக நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் மனதளவில் வெறுக்கும் சதா, இவரை பிடிக்கவில்லை என அவமானப்படுத்த, இவருக்குள் மீண்டும் ரெமோ என்னும் ஒரு புதிய குணம் தோன்றுவது தான படத்தின் கதை.
இந்நிலையில் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகின்றன.இதே போன்று விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக 'அபராஜிதடு' (அந்நியன்) என்ற பெயரில் இப்படம் வருகிற மே 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட இருக்கிறது.
இப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் இதனை 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர்.
- அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2016- ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 3.2 லட்சமாக இருந்தது.
தற்போது 2024-ம் ஆண்டில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 12.3 லட்சமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். அங்கு 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
டெக்சாசில் 1.5 லட்சம் பேர், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர், இல்லினாய்சில் 83 ஆயிரம் பேர், வர்ஜீனியாவில் 78 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் அசோக் கொல்லா கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்களுடன் 10 ஆயிரம் எச்1பி விசா வைத்திருப்பவர்களும் வருகிறார்கள்.
அமெரிக்காவில் தெலுங்கு பேசுபவர்களில் பழைய தலைமுறையினர் பெரும்பாலும் தொழில்முனைவோராக உள்ளனர். அதே–சமயம் 80 சதவீத இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உள்ளனர் என்றார். இந்த தகவல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார்.
- இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்.
மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை.
- பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.
இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்வுகளை நடத்துவதற்கு 'எளிய தெலுங்கு' பாடப் புத்தகமான 'வெண்ணெலா'வைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். 'எளிய தெலுங்கு' பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது
- சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
