search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple encroachment"

    • இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
    • பாரபட்சம் இல்லாம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலைக்கு நேற்று வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 75 -வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் பின்தங்கி உள்ளது.

    75 ஆண்டுகளில் உலக நாடுகளில் இந்தியா வல்லரசாகவும், நல்லர சாகவும் வளர்ந்துள்ளது. தமிழக அரசு அனைத்து துறைகளையும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கு வேளையில் சுதந்திர இந்தியாவின் 75 -வது ஆண்டு பவள விழாவில் அதிக கவனம் செலுத்தாதது வேதனை அளிக்கிறது. மொழிப்போர் தியாகிகள் மற்றும் திராவிட இயக்க தியாகிகளுக்கு வழங்கும் சலுகையை சுதந்திர பேராட்ட தியாகிகளுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சுதந்திர இந்தியாவின் பவள விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் பல இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்து கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவிக்கின்றது. இன்னும் பல கோவில்களில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத்துறை உண்மையாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    தமிழகத்தில் மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றத்தால் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர்.

    தமிழக அரசு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போது தேர்தல் வந்தாலும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. அரசு அரசு விழாவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

    மேலும் திருவண்ணா மலை நகரை இணைக்கும் 9 பாதையின் முகப்பிலும் அண்ணாமலையார் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.

    அருணாசலேஸ்வர் கோவிலுக்கு விரைவில் யானை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அசோக்குமார், பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×