search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tenders"

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரெயில்வே டெண்டர்கள் குறித்த விவரங்கள் இனி ஆன்லைன் மூலமே தெரிவிக்கப்படும் எனவும், செய்தித்தாள்களில் விளம்பரம் இல்லை எனவும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayBoards
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையில் விடப்படும் டெண்டர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் வழக்கத்தை கைவிட ரெயில்வே துறை தற்போது முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் டெண்டர் விளம்பரங்கள் அளிப்பதனால் ஏற்படும் அதிகப்படியான செலவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் டெண்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RailwayBoard
    ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளை ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    அரசு துறைகளில் உள்ள 30-க்கும் அதிகமான பிரிவுகளுக்கு இந்த துறை மூலம்தான் தேர்வு நடத்தப்படுகிறது.

    டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்த இப்போது அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக விருப்பமுள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன.

    மாறி வரும் காலத்துக்கு ஏற்ப புதிய நடைமுறையை புகுத்துவது அவசியம் என்றும், பழைய காலம் போல் பேப்பரில் பரீட்சை எழுதி அதை திருத்தி முடிவுகளை அறிவிக்க கால விரயம் ஏற்படுவதால் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பரீட்சை எழுத விரும்புபவர்கள் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில்தான் பதில்களை அனுப்ப வேண்டும்.

    பாஸ்போர்ட் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளை தனியாரிடம் ஒப்படைத்திருப்பது போல் தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து ஹால் டிக்கெட்டை சரி பார்ப்பது உள்பட பல்வேறு பணிகளை ஒப்படைக்க உள்ளனர்.


    இந்த டெண்டரை அரசு துறை நிறுவனமான எல்காட் எடுத்து நடத்த முன் வருமா? அல்லது தனியார் கம்ப்யூட்டர் கம்பெனிகள் ஏற்று நடத்த முன் வருமா? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

    இதுபற்றி சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் போது, “தனியாரிடம் இதை ஒப்படைத்தால் நிறைய தவறுகள் நடக்கும். வினாத்தாள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே நன்மைகளை விட அதிக தீமைகள்தான் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

    அரசுத் துறையில் வேலையில் சேருவதற்கு பட்டப்படிப்பு படித்திருந்தாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதலாம். தற்போது இதை ஆன்-லைனில் தேர்வு எழுத சொல்லும்போது கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஏனென்றால் நிறைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை சரளமாக பயன்படுத்த தெரியாது. இதனால் தடுமாற்றம் அடைவார்கள்.

    அதுமட்டுமல்ல. கடந்த 2015-ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘சர்வர்’ முடங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

    மேலும் வினாத்தாள் வெளியாக அதிக வாய்ப்பும் உருவாகும். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும்தான் தேர்வாணையத்தின் பணி என்றும் அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். தேர்வாணையத்தில் உள்ள பார்வையாளர் ஒருவர் மட்டுமே இருப்பார் என தெரிகிறது. எனவே இத்தகைய சூழலில் கண்டிப்பாக முறைகேடுகள் நடைபெறும்.

    முக்கியமாக வினாத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பணியை செய்வதற்கு 1 நாளைக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புள்ளது.

    பல மாநிலங்களில் ஆன்-லைன் தேர்வுக்கான வினாத்தாள் இப்படித்தான் கசிந்தன.

    எனவே தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் வழங்காமல் அரசு பணியாளர் தேர்வாணையமே இதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPSC
    ×