search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tenure"

    • ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார்.
    • ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

    இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனெரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 உடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திரா பதவியேற்பார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தற்சமயம் ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படையணியை வழிநடத்தியுள்ளார்.

    மேலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அசாம் ரைபிள்ஸ் படைக்கு கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் பணியாற்றியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்திய ராணுவத்தின் 30 வது தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முன்னதாக தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந் தேதி வரை நேரில் பெற்றுக் கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.100 ஆகும். பிளஸ்-2 தேர்்ச்சி பெற்று 1.8.2022 அன்று 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதிக்குள் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு கிடைக்குமாறு கூரியர் அல்லது பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் நேரடி விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று இந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தொடங்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேர பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் வழங்குவதற்கு வருகிற 12-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ×