என் மலர்
நீங்கள் தேடியது "Terror attack"
- பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
- காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியை போலீசார், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூன்று வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது.
- பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
- நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".
பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.
- உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.
ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், கோயிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டிரோன்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.
அவர்கள் உள்ளுர் வாசிகள் கிடையாது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷிவ்கோடா கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் அப்பகுதிகளில் ராணுவம் தீவிர சோதனையில் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரியாசி மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத தாக்குதல் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
- உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் - ரியாசியை இணைக்கும் வகையில் உலகின் மிக உயரமான சென்னாப் ரெயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமாக முதல் ரெயில் நேற்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சென்னாப் ரெயில்வே பாலம் (359 மீட்டர்கள்) பாரிஸில் உள்ள உயரத்துக்கு பிரசித்தி பெற்ற ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், இந்த பாலத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சுரங்கப்பாதை எண் ஒன்றில் மட்டும் மிச்சமுள்ள மீதி வேலைகள் முடிந்ததும் இன்னும் நான்கைந்து மாதத்துக்குள் சென்னாப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சென்னாப் பாலம், சுமார் 272 கிலோமீட்டருக்கு போடப்படும் உத்தம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா (USBRL ) ரெயில்வே தடத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரெயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. இதற்கிடையில் இந்த ரயில் பாலம் இணையும் ரியாசி மாவட்டத்தில் சமீபத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு.
- இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய கமாண்டர்கள் உள்பட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 38 பேர் உயிரிழந்தனர் என்றும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். 20க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.
இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.
எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால்தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார். #PulwamaAttack #PakistanMurdabad
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதற்கு இணங்க இச்சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டல பகுதியில் பலுகிஸ்தான் உள்ளது. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘பலோச் ராஜி அஜோல் சங்கள்’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
எனவே அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரோந்து படையின் மீது பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
அதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். பலுகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

