என் மலர்
நீங்கள் தேடியது "Terrorist attack"
- தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
- தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்- ஷபாப் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. அல்-கொய்தா ஆதரவு பெற்ற இந்த இயக்கம் ராணுவ வீரர்கள், போலீசார், பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை ஓட்டலின் நுழைவு வாயிலில் மோத செய்து வெடிக்க வைத்தனர். பின்னர் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபடி ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர்.
உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். ஓட்டலில் பால்கனியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். ஓட்டலுக்குள் சிக்கியுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரு தரப்பினருக்கு இடையே நேற்று முழுவதும் சண்டை நீடித்தது.
ஓட்டலுக்குள் பாதுகாப்பு படையினர் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டனர். இதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பணய கைதிகள் மீட்கப்பட்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. இச்சண்டை சுமார் 30 மணி நேரம் நீடித்தது. இதுகுறித்து ராணுவ கமாண்டர் ஒருவர் கூறும்போது, ஓட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓட்டலில் இருந்து கடந்த சில மணி நேரங்களாக துப்பாக்கி சூடு எதுவும் நடக்கவில்லை' என்றார். தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மற்றும் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அவர் தெரிவிக்க வில்லை.
ஓட்டலுக்குள் வெடி பொருட்களை தீவிரவாதி கள் மறைத்து வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதால் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
ஓட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்ததும் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் ஓட்டல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இன்னும் சிலர் கழிவறையில் பதுங்கி கொண்டனர்.
ஓட்டலுக்குள் சென்ற பாதுகாப்பு படையினர் கழிவறையில் மறைந்திருந்த குழந்தைகள், பெண்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
- தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
- ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.
நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
- புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.