என் மலர்
நீங்கள் தேடியது "Thane"
- குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
தானே:
தானே மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மும்ரா, திவா குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில் தானே மாநகராட்சியினர் மும்ரா, திவா பகுதியில் 4 நாட்கள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த 212 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
- புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
- சிறுமியை காவல் துறையினர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2019 ஆண்டு வீட்டில் இருந்து மாயமாகி போனார். சிறுமியின் தந்தை தனது மகள் காணவில்லை என்று டோம்பிவிலியை அடுத்த மன்படா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், சிறுமியின் இருப்பிடம் தெரியவில்லை. இந்த நிலையில், முடிக்கப்படாத வழக்குகளை விசாரிக்கும் பணிகளை மன்படா காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அதன்படி 2019-ம் ஆண்டு காணாமல் போன சிறுமியை அவரது ஆதார் எண் கொண்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். காணாமல் போன சிறுமி ஒடிசாவில் மீட்கப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி தனது காதலருடன் ஓடியது தெரியவந்துள்ளது.
வீட்டை விட்டு 28 வயதான காதலருடன் ஓடி வந்த சிறுமி அவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது மேஜர் ஆன நிலையில், சிறுமியை காவல் துறையினர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர்.
சிறுமியை திருமணம் செய்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு, மன்படா காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
- மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது.
- சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது.
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பதைத் தாண்டி இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விளையாடும் ஆட்டமாக கிரிக்கெட் உள்ளது.
அந்த வகையில் மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது. மும்பை மாநகரின் தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்த இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவ்லரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தாயாராக நின்றுகொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்ததார். சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
அந்த நபர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவராத நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக மாரடைப்பு மரணங்களும், ஹீட் ஸ்டிரோக் மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தத்க்கது.

- கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார்.
- சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்
மகாராஷ்டிராவில் 9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுவன் காணாமல் போகவே அவனை உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணியளவில் வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி சிறுவனின் உடல் அவனது தந்தையின் வீட்டில் அருகில் கிடந்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த திங்கள்கிழமை இரவு மகனை வீட்டுக்கு அழைத்துவந்து நோட்டுப் புத்தகத்தில் இந்த பேப்பர்களை கிழித்து அதை ஒன்று சேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார்.
இதனால் சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலைக்கு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் சம்பவத்தின்போது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
- உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.
- இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பிறந்த 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வா மருத்துவமனை என அறியப்படும் இந்த மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட 6 குழந்தைகளும் கடந்த மாதம் உயிரிழந்தது.
உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்தாண்டு மட்டும் இந்த மருத்துவமனையில் பிறந்த 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி - 17, பிப்ரவரி - 10, மார்ச் - 22, ஏப்ரல் - 24, மே - 16 ஜூன் - 21, குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவிலை. ஆனால் நேற்று 2 குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் படேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது, மகாராஷ்டிரா அரசா? மருத்துவமனை நிர்வாகமா? அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால் தான் குழந்தைகள் உயிரிழந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதார அமைச்சர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன.
- மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது.
மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமையன்று மதுபோதையில் BMW சொகுசு காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் காவேரி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து மிஹிர் தலைமறைவானான்.

மிஹிரின் தந்தை மற்றும் அவருடன் காரில் வந்த டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், மிஹிரை ஆறு தனிப்படைகள்அமைத்து வலைவீசி தேடிவந்தது மும்பை போலீஸ். இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன. விபத்தில் கார் பானட்டில் சிக்கி 1.5 கி.மீ தூரத்துக்கு இழுத்துசெல்லப்பட்டு உயிருக்கு போராடிய காவேரியை, வண்டியை நிறுத்தி காரில் இருந்து விடுவித்து கீழே சாலையில் கிடத்தியபின், மிஹிர் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் அமர ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிய டிரைவர் காவேரி மீது மீண்டும் காரை ஏற்றி இறக்கியுள்ளார்.

அதனபின்னர் மற்றொரு காரில் மாயமான மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது. விபத்து ஏற்படுத்தியதும் கோரேகானில் உள்ள தனது காதலி வீட்டுக்கு மிஹிர் சென்று சேர்ந்ததும் மிஹிரின் காதலி அவனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்து மிஹிரை வேறொரு காரில் ஏற்றி போரிவாலியில் உள்ள தங்களின் வீட்டுக்கு அவனது சகோதரி அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கிருந்து மிஹிருடன் அவனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் அவனது நண்பன் என 5 பேரும் மும்பைக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தந்து நண்பனுடன் மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளான்.
ஐவரும் செல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். மிஹிரின் நன்பனின் போனை போலீசார் டேப் செய்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மிஹிரின் நண்பன் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களின் மறைவிடம் தெரிந்து போலீசார் மிஹிர் உட்பட அனைவரையும் கைது செய்தனர். மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிஹிர் ஷாவுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விபத்தில் உயிரிழந்த காவேரியின் மகள் கூறியுள்ளார்.
- மும்ராவில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா பகுதியில் வேலை செய்கிறார்
- கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மனைவி தனியாக வாக்கிங் செல்வதால் ஆத்திரமடைந்த கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மும்ரா பகுதியில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மனைவி அதிகாலையில் தனியான நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது.
எனவே அவரது கணவன் கடந்த செவ்வாய்கிழமை இரவு, தனது மாமனாரை அழைத்து தனியாக வாக்கிங் செல்வதை காரணம் காட்டி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் மூன்று முறை "தலாக்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இது இப்போது இந்தியச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்.
எனவே கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பம்பாய் திருமணங்கள் சட்டம் மற்றும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் சொன்ன கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தானே:
மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் வாக்லே எஸ்டேட் பகுதி அமைந்து உள்ளது. இங்குள்ள 5 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைதொடர்ந்து குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர் வெளியேற்றப் பட்டவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
- வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தானே:
தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.
மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.
இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.

இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். நொடிப்பொழுதில் பாலம் இடிந்து விழும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மின்திருட்டை தடுக்கும் வகையில் மின்வாரிய பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 2004ம் ஆண்டு பிவண்டி தாலுகா காரிவலி பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டதில் மின்திருட்டு கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் காண்டிலால் அம்ருத்லால் ஹரியா மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின், வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மின்திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபர் காண்டிலாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 9 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #PowerTheftCase