search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanjavur suicide"

    • மனைவியுடன் விவாகரத்து ஆனதால் மனவேதனை அடைந்த லேப் டெக்னீசியன் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 31). இவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். தற்காலிக ஊழியரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆனந்தராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ஆனந்தராஜ் மட்டும் தஞ்சையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே விவகாரத்து கேட்டு ஆனந்தராஜ் மனைவி கோர்ட்டில் விண்ணப்பத்திருந்தார். அதன் தீர்ப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆனந்தராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

    தனக்கு விவாகரத்து ஆகி விட்டதே என எண்ணி மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று ஆனந்தராஜ் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். திடீரென இரவில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்களம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 60) விவசாயக்கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த ராமலிங்கம் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தஞ்சை மாவட்டம் வல்லம்புதூரில் வயிற்று வலி காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் கலைஞர் காலனியை சேர்ந்த சண்முகநாதன் மகள் திவ்யா (வயது 17). இவர் வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா நேற்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×