என் மலர்
நீங்கள் தேடியது "tharamangalam"
- தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
- வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
- வாலிபரிடம் செல்போன், நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தனியாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி நகையை பறித்து சென்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் பச்சகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29).
இவர் அழகு சமுத்திரம் சினிமா தியேட்டர் முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கார்த்தியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளம்பிள்ளை மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சதீஷ்குமார் (19) உள்பட 2 பேரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், குமார், ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள எடயப்பட்டி கிராமம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 5 வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 1ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயக்கமடைந்த சந்திரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 70). இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்ட முயன்றார். இதற்கு அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (42) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அம்மாசி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், சின்னதுரை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அம்மாசி, சின்னதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.