search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "that"

    • சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
    • மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஓட்டக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஓட்டக்குட்டை பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மரத்தில் கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை சுமதி அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கட்டியிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சென்ற போது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை. அப்போது ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.

    எனவே சிறுத்தை தான் ஆட்டுக் குட்டியை உயிரோடு இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமதி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து கால் தடயங்களை பார்த்த போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்று உறுதிசெய்தனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர். எனவே விரைவில் கூண்டு வைக்கப்படுகிறது.

    • சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை ரோட்டில் பாய்ந்து சென்ற சிறுத்தையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகளும் அடிக்கடி ரோட்டை கடந்து உலாவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அடுத்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (41). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் மாட்டு தீவனங்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் கறந்து சத்தியமங்கலம், பண்ணாரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் புது குய்யனூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பால் விற்பனை செய்ய சென்று கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்-பண்ணாரி ரோடு குய்யனூர் பிரிவு அருகே சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்பு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து சென்றது. இதை கண்டு நிலை தடுமாறினார்.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விளக்கை எறிய விட்டு பார்த்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிறுத்தை சென்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது முன்பு சென்றது சிறுத்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் குறித்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தை, யானை மற்றும் வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

    தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

    ×