என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the accident"

    • முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள கம்புளியம்பட்டி, காசிபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). மீன் வியாபாரியான இவர் தனது உறவினர் சுஜீத் என்பவருடன் சம்பவத்தன்று இரவு மீன் வியாபாரத்திற்கு ஐஸ் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்று விட்டு 2 பேரும் மீண்டும் சென்னிமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை சுஜீத் ஓட்ட இளங்கோ பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது சிப்காட் 3-வது கிராஸ் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் இளங்கோவுக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சுஜீத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.
    • மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலான மழை பெய்தது. இந்த மழையின்போது பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.

    அப்போது அவ்வழியாக வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான செந்தில்(45), மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் மரம் விழுந்தது தெரியவில்லை. இதனால் அவருடைய மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களாவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவர் மகளின் திருமண அழைப்பிதழை உறவினருக்கு கொடு ப்பதற்காக பெருந்துறை ஈரோடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×