என் மலர்
நீங்கள் தேடியது "the house was confiscated"
- ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் புதுமை காலனியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது ஒரு வீட்டில் 10 கிராம் அளவு கொண்ட 164 கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். மொத்தம் 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ஷேக் தாவூத் (28) என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் தான் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.