என் மலர்
நீங்கள் தேடியது "the influence of alcohol"
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவிரி ரோட்டில் உள்ள எடை நிலையம் ஒன்றின் அருகில் இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார்.
போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.
இதேபோல, வண்டியூரான் கோவில் பகுதியிலும் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் (22) என்பவரும் மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.